இந்திய கிரிக்கெட்

கிரிக்கெட்டில் தலைசிறந்த 10 பவுலர்கள் இவர்கள்தான்.. அதில் பும்ராவுக்கு இந்த இடத்தை தருவேன் – ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

​இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 10 டெஸ்ட் பவுலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இதில் இந்திய அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ராவிற்கு மூன்றாவது இடத்தை வழங்கி கௌரவித்துள்ளார்.

​டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி, 20-க்கும் குறைவான ஆவரேஜ் வைத்திருக்கும் ஒரே பவுலராக பும்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார். குறிப்பாக பவுலிங்கிற்கு அதிகம் ஒத்துழைக்காத இந்திய பிட்சுகளிலும் தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

​டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பவுலராக உருவெடுக்கும் அனைத்து தகுதிகளும் பும்ராவிற்கு இருப்பதாகப் பாராட்டியுள்ள ஸ்டூவர்ட் பிராட், வசீம் அக்ரம், டேல் ஸ்டெய்ன், கர்ட்லி ஆம்ப்ரோஸ் போன்ற ஜாம்பவான்களை விட பும்ராவை தனது பட்டியலில் முன்னணியில் வைத்துள்ளார்.

- Advertisement -

​பும்ரா குறித்து ஸ்டூவர்ட் பிராட் பேசும்போது “அவர் தனது கரியரின் பாதியில் இருக்கும்போதே பல அசாத்தியமான சாதனைகளை செய்து வருகிறார், அவரை விட ஒரு சிறந்த பவுலரை இனி நான் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
​தொடர்ந்து பேசிய பிராட் “அவருடைய ரன் அப் மற்றும் டெலிவரி மிகவும் யுனீக்காக இருக்கிறது, பேட்டர்களுக்கு அவுட் ஸ்விங்கர், இன் ஸ்விங்கர் மற்றும் பவுன்சர்களை வீசி கடும் சவாலை அளிக்கிறார், அவர் பந்தை கையில் எடுக்கும் போதெல்லாம் நான் அதை பார்க்க ஆசைப்படுகிறேன்” என்று பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts