ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு வாபஸ் ஏன்?.. டி20-WC தண்டனையில் தப்பிக்க மாஸ்டர் பிளான்

0
543
Hasaranga

இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது மூன்று வடிவிலான கிரிக்கட் தொடர்களிலும் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 எனக் கைப்பற்றியது. இதற்கடுத்த நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் அடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு அணிகளும் விளையாட இருக்கின்றன. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஐபிஎல் தொடங்கும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் தேதி துவங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரையில் நடக்கிறது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே சில ஆண்டுகளாக உரசல் போக்கு மிக அதிகமாக காணப்படுகிறது. நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் டைம் அவுட் முறையில் ஏஞ்சலோ மேத்யூசை பங்களாதேஷ் அணி வெளியேற்றியதில் இருந்து இந்த உரசல் அதிகமானது.

இந்த நிலையில் தற்போது இலங்கை அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சூழ்நிலையில், இந்த இரண்டு அணிகளும் களத்தில் ஏற்கனவே நடந்த பிரச்சனைகளை மனதில் வைத்து, ஒருவருக்கு ஒருவரை சீண்டிக் கொள்ளும் விதமாக கொஞ்சம் எல்லை மீறி நடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐசிசி வைத்த ட்விஸ்ட்

இப்படியான சூழலில் ஐபிஎல் தொடரில் பெங்களூர் தனியார் கழட்டி விடப்பட்டு, தற்பொழுது ஹைதராபாத் அணியால் 1.50 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கும் இலங்கை நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிவித்திருந்த ஓய்வை திரும்பப் பெற்றுக் கொண்டு, பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முடிவு செய்தார்.

- Advertisement -

இந்த நிலையில் அவருக்கு இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஐசிசி அதிரடியாக தடை விதித்திருக்கிறது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரின் தீர்ப்புக்கு எதிராக வாதாடிய காரணத்தினால் அவருக்கு இந்தத் தடையும், மேற்கொண்டு மூன்று புள்ளிகள் தகுதி நீக்கமும் செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : ஆர்சிபி அணியின் பெயர் திருத்தம்.. புதிய பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

பங்களாதேஷ் அணிக்கு திருப்பி பதிலடி தருவதற்காக ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் விளையாடும் முடிவு செய்திருந்த பொழுது, ஐசிசி இப்படியான தடையை அறிவித்தது. இதில் இன்னொரு சுவாரசிய விஷயமாக ஏற்கனவே ஹசரங்கா ஐந்து தகுதி நீக்க புள்ளிகளை பெற்றிருக்கிறார். இத்தோடு சேர்த்து எட்டு தகுதி நீக்க புள்ளிகள் இருக்கிறது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக அறிவித்து இலங்கை டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் இருந்திருந்தால், அவர் டி20 உலக கோப்பையில் சில போட்டிகளில் விளையாட தடை வந்திருக்கும். அவர்தான் தற்போது டி20 அணி கேப்டனாகவும் இருக்கிறார். எனவே இது அவருடைய மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் மாஸ்டர் பிளான் என்றும் சொல்லப்படுகிறது.