எங்கள பாத்து இனிமே எல்லா டீமும் விளையாடுவாங்க.. வெற்றிக்கு காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
438
DK

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த விதம் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு பிளே ஆப் வாய்ப்பே இல்லை என்று தான் எல்லோரும் நினைத்திருந்தார்கள். தற்பொழுது அவர்கள் மீண்டு வந்த விதம் குறித்து அந்த அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் ஆர்சிபி அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்று 7 போட்டிகளை தோற்றது. இதில் 6 போட்டிகள் தொடர்ந்து தோற்றது. எனவே இந்த நிலையில் இருந்து மீண்டு வந்த அணிகள் எதுவும் கிடையாது. இதன் காரணமாக ஆர்சிபி அணி அடுத்த ஒரு போட்டியை தோற்றாலும் பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறி விடக்கூடிய நிலையில் இருந்தது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையிலிருந்து வென்றாக வேண்டிய ஆறு போட்டிகளையும் தொடர்ந்து வென்று அதிரடியாக ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. மேலும் சிஎஸ்கே அணியை வென்றால் இறுதிப் போட்டிக்குள் நுழையலாம் என்ற நிலையில், சொந்த மைதானத்தில் அந்த அணி வெற்றி பெற்றது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியதாக இருக்கிறது.

இது குறித்து ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது “மக்கள் சில பயணங்களை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள். நாங்கள் திரும்பி வந்த விதம் மற்றும் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றதாக வேண்டிய சூழ்நிலையில் வெற்றி பெற்றதை, மக்கள் எப்பொழுதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

ஒவ்வொரு வருடமும் ஏழு அல்லது எட்டு போட்டிகளை எட்டும் பொழுது, இரண்டு அணிகள் ஆவது ஒன்று அல்லது இரண்டு போட்டிகளை மட்டுமே வென்று இருக்கும். அப்படியான அணிகள் எங்களைப் பார்த்து ஆர்சிபி செய்தது போல நம்மாலும் செய்ய முடியும் என்று நம்பும். அதற்காக விளையாட முயற்சி செய்யும். நாங்கள் செய்திருப்பதை அவர்களாலும் செய்ய முடியும் என்று நம்புவார்கள். இது எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சுயநலமே இல்லாத பையன்.. நான் பேசுறப்ப ஒன்னு சொன்னாரு ஆச்சரியப்பட்டுட்டேன் – அம்பதி ராயுடு பேச்சு

இந்த ஆட்டத்திற்கு வரும்பொழுது எங்கள் குறித்தான நம்பிக்கை கொஞ்சமாகவே எல்லோருக்கும் இருந்தது. நாங்கள் நடப்பு சாம்பியனுக்கு எதிராக விளையாடினோம். ஆனால் நாங்கள் விளையாடிய விதத்தில் பெருமை கொள்கிறோம். மேலும் எங்களுடைய வெற்றிக்கு ஆக்ரோஷமான பேட்டிங் மட்டுமில்லாமல், மிகச் சிறப்பான பீல்டிங்கும்” ஒரு முக்கிய காரணம் என்று கூறியிருக்கிறார்.