அபிஷேக் சுயநலமே இல்லாத பையன்.. நான் பேசுறப்ப ஒன்னு சொன்னாரு ஆச்சரியப்பட்டுட்டேன் – அம்பதி ராயுடு பேச்சு

0
266
Ambati

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 20 புள்ளி 50 கோடி ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி பாட் கம்மின்சை வாங்கியது. மேலும் அவரை கேப்டனாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து அவரது தலைமையில் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து இருக்கிறது. இதற்கு மிக முக்கியமான காரணமாக துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இருக்கிறார். அவர் குறித்து புகழ்ந்து அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 214 ரன்களை துரத்தியது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 66 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனால் ஹைதராபாத் அணி வெற்றி பெறுவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை. அந்த அணி 19ஆவது ஓவரில் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடு இருக்கும் அபிஷேக் ஷர்மா 39 ரன் ஆவரேஜில், 209 ஸ்ட்ரைக் ரைட்டில் 467 ரன்கள் குவித்திருக்கிறார். அவருடைய அபாரமான ஸ்டிரைக் ரேட் ஹைதராபாத் அணிக்கு நடப்பு ஐபிஎல் தொடரில் பலமுறை சிறப்பான துவக்கத்தை பவர் பிளேவில் கொடுத்திருக்கிறது. மேலும் 39 சித்தர்கள் அடித்து ஒட்டுமொத்தமாக ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்தியர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார்.

அபிஷேக்சர்மா குறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “சில நாட்களுக்கு முன்பு நான் ஹைதராபாத்தில் அவருடன் பேசினேன். நான் அவரிடம் பெரிய ஸ்கோர் அடிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியைக் கேட்டேன். நான் தாக்கி விளையாட விருப்பப்படுகிறேன். ஒவ்வொரு பந்தையும் பவுண்டரி மற்றும் சிக்ஸருக்கு அடிக்க விரும்புகிறேன். என்னை நேர்மறையாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறேன் என்று கூறினார்.

உண்மையில் அவர் கொஞ்சமும் சுயநலமற்ற வீரர். அவர் அணிக்காக அதிரடியாக விளையாட நினைக்கிறார். அவர் இப்படியான பார்மில் இருக்கும் பொழுது சில பந்துகளை எடுத்துக் கொண்டு பெரிய ரன்களுக்கு அவரால் செல்ல முடியும். அவரால் நூறு ரன்கள் அடிக்கவும் முடியும். ஆனால் அவர் அப்படி இருப்பது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவுக்கு நான் பந்து வீச மாட்டேன்.. உண்மையாவே பயமா இருக்கு – பாட் கம்மின்ஸ் பேச்சு

அவர் இதை அணிக்காக செய்கிறார். எனவே அவரை நாம் பாராட்ட வேண்டும். சொந்த ரன்களை பற்றி யோசிக்காத வீரரை இந்திய அணியில் வைத்துக் கொள்வது முக்கியம். டி20 உலகக் கோப்பைக்கு பின்னால் இந்திய டி20 அணியில் அபிஷேக் ஷர்மா இருக்க மாட்டார் என்று நான் நினைக்கவில்லை. அவர் கட்டாயம் இந்திய அணியில் இடம் பெறுவார்” என்று கூறியிருக்கிறார்.