மழையால் ராஜஸ்தானுக்கு நடந்த சோகம்.. ஹைதராபாத்துக்கு லக்.. பிளே ஆஃப் சுற்று முழு விபரங்கள்

0
279
IPL2024

இன்று ஐபிஎல் தொடரில் 70ஆவது போட்டி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் மழை நிற்காத பெய்த காரணத்தினால் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக பரிதாபமாக ராஜஸ்தான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இந்த போட்டிக்கு முன்பாக கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 19 புள்ளிகளும், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளும் எடுத்து இருந்தன. இந்த நிலையில் 15 புள்ளிகள் எடுத்து இருந்த ஹைதராபாத் அணி, தங்களுடைய கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை வென்று 17 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது.

- Advertisement -

எனவே ராஜஸ்தான் அணி கொல்கத்தா அணியை வென்றால் 18 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறலாம் என்கின்ற நிலை இருந்தது. இப்படியான சூழ்நிலையில் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி முடிவுக்கு வந்துவிட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது 19 புள்ளிகள் உடன் கொல்கத்தா அணி முதல் இடத்தில் இருக்கிறது, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 17 புள்ளிகள் சமமாக எடுத்திருந்தாலும், ஹைதராபாத் அணி ரன் ரேட் உயர்வாக இருக்கின்ற காரணத்தினால் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதனால் மூன்றாவது இடத்திற்கு ராஜஸ்தான் தள்ளப்பட்டு இருக்கிறது. நான்காவது இடத்தில் பெங்களூரு இருக்கிறது.

ராஜஸ்தான் அணி இந்த போட்டிக்கு நான்கு போட்டிகளுக்கு முன்பாக 16 புள்ளிகள் எடுத்து இருந்தது. அங்கிருந்து தொடர்ச்சியாக நான்கு போட்டிகளை தோற்றது. இந்த நிலையில் அந்த அணிக்கு ஐந்தாவது போட்டியும் மழையின் காரணமாக டிரா ஆகிவிட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு பெரிய சோகமாக இது அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்கள பாத்து இனிமே எல்லா டீமும் விளையாடுவாங்க.. வெற்றிக்கு காரணம் இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்த நிலையில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் நாளை மறுநாள் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் கொல்கத்தா ஹைதராபாத் அணிகள் மோதிக் கொள்கின்றன. அடுத்து 22 ஆம் தேதி இதே மைதானத்தில் ராஜஸ்தான் பெங்களூர் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதற்கு அடுத்து இரண்டாவது தகுதி சுற்று சென்னை சேப்பாக்கத்தில் 24 ஆம் தேதியும், இறுதிப் போட்டி மீண்டும் இதே மைதானத்தில் 26ஆம் தேதியும் நடக்க இருக்கிறது.