ஆர்சிபி அணியின் பெயர் திருத்தம்.. புதிய பெயர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது

0
461
RCB

இந்த முறை 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 17ஆவது ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி மீதான எதிர்பார்ப்புகள் திடீரென மிக அதிகமாக மாறி இருக்கிறது.

நடந்து முடிந்த மினி ஏலத்தில் ஆர்சிபி அணி மும்பை இந்தியன்ஸ் அணி இடம் இருந்து ஆல் ரவுண்டர் கேமரூன் கிரினை டிரேடிங் முறையில் வாங்கியது. மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக அல்ஜாரி ஜோசப் மற்றும் லாக்கி பெர்குஷன் என இரண்டு பந்து வீச்சாளர்களை வாங்கி இருக்கிறது.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் பெண்கள் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. அந்த அணியின் 17 வருட டி20 கிரிக்கெட் லீக் வரலாற்றில் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இந்த காரணங்கள் எல்லாம் சேர்ந்து இந்த ஆண்டு ஆண்கள் ஆர்சிபி அணி மீது பெரிய எதிர்பார்ப்பை ஐபிஎல் தொடரில் உருவாக்கி இருக்கிறது. அவர்களுக்கு தற்போது சுழல் பந்துவீச்சு துறை மட்டுமே பலவீனமாக இருக்கிறது. மற்றபடி பேட்டிங் வரிசை மற்றும் வேகப்பந்து வீச்சு யூனிட் மிகச் சிறப்பாகவே அமைந்திருக்கிறது.

ஆர்சிபி அணியின் பெயர் மாற்றம் :

இரண்டு மாதங்களாக தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் இரண்டு நாட்கள் முன்பாக அணியில் இணைந்து விட்டார். அவர் அணியில் இணைந்ததும் ஆர்சிபி முகாமில் உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் பெயரில் ஒரு மாற்றத்தை அந்த அணி நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது பெயரில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பெயரில் உள்ள எழுத்துக்களில் ஒரு மாற்றத்தை செய்திருக்கிறது. இதன் மூலம் உச்சரிப்பு மாறுகிறது.

இதையும் படிங்க : கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பும் சித்து.. 2008-யே ஒரு போட்டிக்கு இத்தனை லட்சமா?.. அவரே வெளியிட்ட தகவல்

இதற்கு முன்பு Royal challengers Bangalore என்று இருந்தது, தற்பொழுது Royal challengers Bengaluru என்று மாற்றப்பட்டு இருக்கிறது. அதாவது முன்பு பங்களூர் என்று இருந்தது தற்போது பெங்களூரு என்று மாற்றப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பெயர் குறித்த அறிவிப்பை விளம்பரத்தில் நாசுக்காக கூறியிருந்த ஆர்சிபி நிர்வாகம் தற்பொழுது அறிவித்திருக்கிறது.