ரோகித் டிராவிட் இந்த விஷயத்துல புத்திசாலிங்க.. ரிங்கு சிங் புதுசா ஆரம்பிக்கனும் – சவுரவ் கங்குலி பேட்டி

0
31
Ganguly

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மே மாதம் இறுதியில் முடிந்ததும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இதற்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணி குறித்து சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் ஆரம்பத்தில் ரிங்கு சிங்குக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அணியில் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் ஆக சுனில் நரைன் உருவானதும், இம்பேக்ட் பிளேயர் மூலம் ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கின்ற காரணத்தினாலும், அவர் மேலே வந்து விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

- Advertisement -

இத்தோடு சேர்த்து அவருக்கு இரண்டு முறை சமீபத்தில் மேல் வரிசையில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட பொழுது அவரால் உடனடியாக அதை பயன்படுத்தி பெரிய ரன்களுக்கு செல்ல முடியவில்லை. எனவே இதன் காரணமாகவே அவருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு தரப்படவில்லை என பலரும் நினைக்கிறார்கள்.

இதுகுறித்து பேசி இருந்த அஜித் அகர்கர் நிச்சயமாக ஐபிஎல் தொடரை பார்த்து அவரை விலக்கவில்லை என்பதை கூறியிருந்தார். காம்பினேஷன் காரணமாக அவரை அணியில் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று தெரிவித்திருந்தார். ரிங்கு சிங் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 15 போட்டிகளில் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் பெரிய அளவில் சாதித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி கூறும் பொழுது ” வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகள் சுழலுக்கு சாதகமாகவும் மெதுவாகவும் இருக்கலாம். இதன் காரணமாக அவர்கள் ஒரு கூடுதல் சுழல் பந்துவீச்சாளருடன் செல்வதற்கு விரும்பி இருக்கலாம்.இதன் காரணமாகத்தான் ரிங்கு சிங்குக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் ரிங்கு சிங் மீண்டும் இங்கு முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும், கவலைப்பட கூடாது.

- Advertisement -

இதையும் படிங்க: எல்லா பவுலரும்தான் ரன் தராங்க.. நான் சரியா இல்லனா கூட என் டீம்ல இதை மட்டும் பாருங்க – மிட்சல் ஸ்டார்க் பேட்டி

தற்பொழுது டி20 உலக கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்திய அணி அற்புதமான அணி, அதில் ஒவ்வொருவரும் மேட்ச் வின்னர்கள். இந்த 15 பேர் கொண்ட அணி போதுமானது. ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் புத்திசாலிகள். அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிறந்த அணியை தேர்வு செய்வார்கள்” எனக் கூறி இருக்கிறார்.