ரோகித் சர்மா மும்பை அணியை விட்டு விலகுகிறாரா?.. பயிற்சியாளர் பவுச்சர் சூசகமான பதில்.. ரசிகர்கள் கோபம்

0
2311
Rohit

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மா விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணிக்கான கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நேற்று மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் கேட்ட பொழுது அவர் சூசகமாக ஒரு பதிலை கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா பேட்டிங்கில் சிறந்த முறையில் ஆரம்பித்தார். அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் சதம் அடித்தார். எனவே அவருக்கு நல்ல ஐபிஎல் சீசன் இருப்பதாக அனைவருக்கும் தோன்றியது.

- Advertisement -

ஆனால் இதற்கு அடுத்து அவருக்கு ஆறு போட்டிகள் நல்ல முறையில் செல்லவில்லை. ஆனால் நேற்று கடைசி போட்டியில் 38 பந்தில் 68 ரன்கள் அடித்தார். மேலும் மொத்தமாக 14 போட்டிகள் முழுமையாக விளையாடி 417 ரன்கள் எடுத்து, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவராக மாறினார்.

மேலும் நேற்று அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடிய போட்டியை அந்த அணிக்கான கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் சூசகமான பதில் ஒன்றைக் கூறியிருக்கிறார். அதாவது உறுதியாக இருப்பார் என்று கூறவில்லை.

இதுகுறித்து மார்க் பவுச்சர் பதில் அளிக்கும் பொழுது “என்னைப் பொறுத்தவரையில் அவருடைய சொந்த விதிக்கு அவர்தான் மாஸ்டர். அடுத்து ஒரு பெரிய மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. எனவே என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நேற்று இரவு ரோகித் சர்மாவுடன் கலந்துரையாடினேன். அப்பொழுது அவரிடம் அடுத்து என்னவென்று கேட்டேன். அதற்கு அவர் உலகக் கோப்பை என்று கூறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : நானும் தோனியும் சேர்ந்து விளையாடற கடைசி போட்டியா இருக்கலாம்.. பயத்தில் நடுங்க விடுவாரு – விராட் கோலி பேட்டி

ரோகித் சர்மாவுக்கு இந்த ஐபிஎல் சீசன் கிட்டத்தட்ட இரண்டு சீசன்கள் போல அமைந்தது. அவர் முதல் பாதியை மிகச் சிறப்பாக ஆரம்பித்தார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்தார். வலைகளில் பந்தை நன்றாக அடித்து விளையாடினார். எனவே நாங்கள் அவர் வெளியில் சென்று சிறப்பாக விளையாடப் போகிறார் என்று நினைப்போம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு. எனவே இது இரண்டு சீசன்களாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார். இந்த பதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களை கோபம் அடைய வைத்திருக்கிறது.