ஹர்திக் மொத்த பிரச்சனைக்கும் காரணம் இதுதான்.. பாவம் அவரால இந்த ஒரு விஷயத்தை தாங்க முடியல – கவாஸ்கர் பேச்சு

0
109
Gavaskar

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பிலிருந்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மொத்த பிரச்சனைகளுக்கும் எது காரணமாக அமைந்தது? என்பது குறித்து சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறியது மட்டும் இல்லாமல், தங்களுடைய லீக் சுற்றின் கடைசி போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக நேற்று தோல்வி அடைந்து, புள்ளி பட்டியலில் அந்த அணி நான்கு வெற்றிகள் உடன் மட்டுமே கடைசி இடத்தை பிடித்தது.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் 2022 ஆம் ஆண்டு இதேபோல் நான்கு வெற்றிகள் மற்றும் பெற்று புள்ளி பட்டியலில் அந்த அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது. மீண்டும் ஹர்திக் பாண்டியா தலைமையில் அந்த அணிக்கு இப்படியான சோகம் நிகழ்ந்திருக்கிறது. ஐந்து முறை கோப்பையை வென்ற பெரிய அணி என்பதால் அந்த அணியை சுற்றி நிறைய விமர்சனங்கள் இருக்கிறது.

மேலும் ஹர்திக் பாண்டியா ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக வந்தது மட்டும் இல்லாமல், கேப்டன்சி பொறுப்பில் அவருடைய முடிவுகள் பல விமர்சனத்திற்கு உரிய வகையில் இருந்தது. மேலும் ரசிகர்களும் தொடர்ந்து அவருக்கு மைதானத்தில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தார்கள். இது எல்லாம் சேர்ந்து அந்த அணியை மட்டும் அல்லாமல் அவரையும் சாய்த்து இருக்கிறது.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர் ஒரு நல்ல துவக்கத்தை இந்த ஐபிஎல் தொடரில் பெறவில்லை. மேலும் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்ததில் நிறைய நெகட்டிவ்வான விஷயங்கள் இருப்பதாக நினைக்கிறேன். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் கூட, இப்படியான விஷயங்கள் உங்களை கட்டாயம் பாதிக்கும். அது அவரையும் பாதித்திருக்கும். ஏனென்றால் எல்லோருமே மனிதர்கள். உங்களைப்பற்றிய விமர்சனங்களை நீங்கள் கேட்க விரும்புவதில்லை. எனவே இது அவரை பாதித்திருக்கும் என்று நம்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: ஆர்சிபி சிஎஸ்கே போட்டி நடக்குமா?.. மழை வாய்ப்பு எவ்வளவு.. சப் ஏர் சிஸ்டத்தின் ஸ்பெஷல்

இதையெல்லாம் மீறி அவர் முதல் ஆட்டத்தில் ரன்கள் எடுத்திருந்தால் அல்லது பந்து வீச்சில் இரண்டு விக்கெட் கைப்பற்றி இருந்தால், நிலைமைகள் வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. அதனால்தான் அவருக்கு எல்லாமே போராட்டமாக இருந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.