2025 ஐபிஎல் ஏலத்துல அஸ்வினை யாரும் வாங்க மாட்டாங்க.. அதுக்கு இதான் காரணம் – சேவாக் பேட்டி

0
492
Sehwag

நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் 17ஆவது சீசனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரையில் எட்டு போட்டிகளில் விளையாடி இரண்டு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். மேலும் அவர் ஓவருக்கு 9 ரன்கள் கொடுத்து வருகிறார். இதுகுறித்து வீரேந்திர சேவாக் விமர்சனம் செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை பெறுவது மிகவும் முக்கியமானது கிடையாது என்கின்ற கருத்தை கூறியிருந்தார். தற்பொழுது இது குறித்து வீரேந்திர சேவாக் தன்னுடைய விமர்சனத்தை கொஞ்சம் கடினமாகவே முன் வைத்திருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய வழக்கமான ஆப் ஸ்பின் பந்தை வீசுவதில்லை. ரண்களை அடித்து விடலாம் என்கின்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து கேரம் பந்துகளை வீசி வருகிறார். ஆனாலும் கூட அவரது ஓவரில் ஒன்பது ரன்களுக்கு குறைவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இதன் காரணமாக அவரது விக்கெட் கைப்பற்றும் விகிதம் மிகவும் குறைந்துவிட்டது. அதே சமயத்தில் இந்திய நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர்களான சாகல், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விக்கெட் கைப்பற்றுவது எப்பொழுதும் போல் சிறப்பாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “ஸ்ட்ரைக் ரேட் முக்கியம் கிடையாது என்று கேஎல்.ராகுல் பேட்டிங்கிற்கு சொன்னது போல, தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் டி20 கிரிக்கெட் விக்கெட் எடுப்பது முக்கியமில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது அவருடைய புள்ளி விபரங்கள் நன்றாக இல்லை. நீங்கள் ஒரு பந்துவீச்சாளரை தேர்ந்தெடுக்கும் பொழுது, அவர் 25 30 ரன்கள்தருவார் என்று எதிர்பார்ப்பீர்களா? இல்லை இரண்டு மூன்று விக்கெட்டை பற்றி ஆட்டநாயகனாக வருவார் என்று எதிர்பார்ப்பீர்களா?

- Advertisement -

இதையும் படிங்க : டி20 வேர்ல்ட் கப்புக்கு ஒரு மாசம்தான் இருக்கு.. ஆனா ஐபிஎல்-ல பவுலர்களை அடி வாங்க விடறாங்க – முகமது சிராஜ் வருத்தம்

இவருடைய போட்டியாளர்களான சாகல், குல்தீப் தொடர்ந்து விக்கெட்டுகளை பெற்று வருகிறார்கள். இவர் ஆப் ஸ்பின் பந்துவீச்சு வீசினால் யாராவது ரன் அடித்து விடுவார்கள் என்று தொடர்ந்து கேரம் பால் வீசி வருகிறார். இவர் தனது மனநிலையை மாற்றி ஆப் ஸ்பின் மற்றும் தூஸ்ராவை நம்பினால் விக்கெட்டுகள் கிடைக்கும். இல்லையென்றால் இவர் அணியில் இருக்க முடியாது. மேலும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் இவர் விற்கப்படாமலும் போகலாம்” என்று கூறி இருக்கிறார்.