ஷஷாங்க் சிங் சின்ன சூரியகுமார்.. பேட்டிங்கில மட்டும் கிடையாது இந்த விஷயத்துல கூடதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
80
Shashank

நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வழக்கம்போல் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை. ஆனாலும் அந்த அணியில் இருந்து இந்திய உள்நாட்டு வீரர்கள் ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஸ் சர்மா சிறப்பாக விளையாடி பலரையும் கவர்ந்திருக்கிறார்கள். தற்போது இவர்கள் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

ஷஷாங்க் சிங் ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டிருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ் அணி அவருடைய பெயரில் வேறு ஒரு வீரரை வாங்க முற்பட்டு, கடைசியில் தவறுதலாக இவரை வாங்கினார்கள். அப்படி தவறுதலாக வாங்கப்பட்ட இவர் தான், தற்போது அந்த அணிக்கு இந்த ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் ரன்கள் அடித்தவராக இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தற்பொழுது 32 வயதை எட்டி இருக்கும் அவர், இத்தனை காலம் தன்னுடைய திறமையை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருந்திருக்கிறார். இவருடைய பேட்டிங் முறை மட்டும் இல்லாமல், இவருடைய வயதை வைத்து பார்க்கும் பொழுது, இவருக்கு கிடைத்திருக்கும் எல்லாமே சூரிய குமாருக்கு எந்த வயதில் கிடைத்ததோ அப்படித்தான் அமைந்திருக்கிறது.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இன்று ராஜஸ்தான் பஞ்சாப் அணிகள் விளையாடும் போட்டியில் கவனிக்க வேண்டிய மூன்று வீரர்களை எடுத்துக் கொண்டால், அதில் முதல் வீரராக ஷஷாங்க் சிங் இருப்பார். ஏனென்றால் அவர் அவ்வளவு திறமையான வீரர். அவர் விளையாடும்போது எப்பொழுதும் அவர் மீது கவனம் இருக்கும். அவர் பேட்டிங் செய்யும் விதத்தில், அவரை இந்திய அணிக்கு தேர்வு செய்ய காலம் வரும்.

- Advertisement -

அவருக்கு தற்பொழுது 22 இல்லை 25 வயது ஆகவில்லை. அவர் 32 வயது ஆன ஒரு சீனியர் வீரர். உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி நிறைய அனுபவத்தை வைத்திருக்கிறார். ஆனால் தற்போது அவர் வெளியில் மலர்வதற்கான காலம் இப்பொழுது தான் வந்திருக்கிறது. இவர் பேட்டிங் செய்யும் திறமையில் மட்டுமல்லாமல், கிரிக்கெட் கேரியரிலும் சூரியகுமார் யாதவை நினைவூட்டக்கூடிய சின்ன சூரிய குமாராக இருக்கிறார்.

இதையும் படிங்க: நான் உருவாக்க நினைச்ச இந்திய அணி இப்படிப்பட்டது தான்.. அதிகம் தாழ்வுகளையே சந்திச்சேன் – ரோகித் சர்மா பேட்டி

இரண்டாவதாக ஒரு வீரரை யோசிக்க வேண்டும் என்றால் இளம் வீரர் அசுதோஸ் சர்மா இருப்பார். அவர் இந்த ஐபிஎல் சீசனில் மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்தார். சில போட்டிகள் அவர் வழிகளில் சிறப்பாக இருந்தது. ஆனால் இதற்கு அடுத்து அவருக்கு ஷார்ட் பந்துகள் வீச ஆரம்பித்தார்கள். அங்கிருந்து அவர் கொஞ்சம் தடுமாற ஆரம்பித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -