டி20 வேர்ல்ட் கப்புக்கு ஒரு மாசம்தான் இருக்கு.. ஆனா ஐபிஎல்-ல பவுலர்களை அடி வாங்க விடறாங்க – முகமது சிராஜ் வருத்தம்

0
90
Siraj

நடப்பு ஐபிஎல் தொடர் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இந்த ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டின் அணுகுமுறையை மாற்றிவிட்டதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் பேசி வருகிறார்கள். இந்த நிலையில் பந்துவீச்சாளர்கள் படும் கஷ்டங்கள் குறித்து முகமது சிராஜ் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து முகமது சிராஜ் கூறும் பொழுது ” இப்பொழுது கிரிக்கெட் மிகவும் வித்தியாசமாக மாறிவிட்டது. இப்பொழுது ஒவ்வொரு இரண்டு போட்டிகளுக்கு அடுத்தும் 250 அல்லது 270 ரன்கள் கொண்ட போட்டி வருகிறது. முன்பு 250 ரன்கள் என்பது அரிதான ஒரு விஷயமாக இருந்தது.

- Advertisement -

பந்துவீச்சாளர்களுக்கு தற்பொழுது எந்த உதவியும் இல்லை. மைதானங்கள் மிகவும் சிறியதாக இருக்கிறது. மேலும் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக மிகவும் தட்டையாக இருக்கிறது. பந்தில் ஸ்விங் இல்லை. இப்படி நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து விளையாடி தொடர்ந்து அடிபட மட்டும்தான் முடியும்.

ஒரு பந்துவீச்சாளராக இங்கு நீங்கள் தன்னம்பிக்கையை விடக்கூடாது. நான் வாழ்க்கையில் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டிருக்கிறேன். ஒன்று இரண்டு போட்டிகள் என் வழியில் செல்லவில்லை என்றால் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் மீண்டும் எப்படி வருவது என்று எதிர்பார்ப்பேன்.

இன்னும் ஒரு மாதத்தில் உலகக் கோப்பைத் தொடர் இருக்கிறது. இந்த நிலையில் நான் வீசக்கூடிய ஒரு நல்ல பந்தில் அடிபட்டாலும் பரவாயில்லை, ஆனால் நான் மோசமான பந்துகளை வீசக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன். நான் இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக பந்து வீசவில்லை. தற்பொழுது டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்களுக்கு 40 ரன்கள் என்பது சாதாரணமானது.

- Advertisement -

இதையும் படிங்க : வேற வேலை இல்லையா கோலி .. சோசியல் மீடியாவுல குப்பையான விஷயங்களை படிக்கனுமா? – சைமன் டால் விமர்சனம்

டி20 கிரிக்கெட்டில் அதிர்ஷ்ட முக்கியமானது. நீங்கள் ஒரு நல்ல பந்தில் விக்கெட் எடுக்க முடியாமல் போகும். அதே சமயத்தில் ஒரு புல்டாஸ் பந்தில் விக்கெட் கிடைக்கும். எனவேஅதிர்ஷ்டம் இங்கு முக்கியமானது. பயிற்சியில் என் குறைகளை சரி செய்கிறேன். களத்தில் எப்பொழுதும் என்னை நான் பெரிய பந்துவீச்சாளராகவே நினைக்கிறேன். என் மனநிலை அப்படித்தான் இருக்கும். இது நான் சிறப்பாக செயல்பட உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.