ஐபிஎல்- ல் 10 அணிகள் வந்ததும்.. எங்களுக்கு ரிஷப் பண்ட் மேலே சந்தேகம் இருந்தது உண்மை – சவுரவ் கங்குலி பேட்டி

0
1706
Ganguly

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறவிட்டாலும், கடுமையான போட்டியைதொடரில் கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் இருக்கும் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கு, சாலை விபத்தில் சிக்கி மறுவாழ்வில் இருந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் திரும்பினார். அதே சமயத்தில் அவருடைய மறு வருகை யாரும் எதிர்பாராத வகையில் மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. அவர் ஒரு கேப்டனாக மட்டும் இல்லாமல், விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேன் ஆகவும் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் 13 போட்டிகளில் விளையாடி 40 ஆவரேஜில் 446 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 155 என்று சிறப்பாக இருக்கிறது. இதில் மூன்று அரை சதங்கள் அடக்கம். மேலும் 36 பவுண்டரிகள் மற்றும் 25 சிக்ஸர்கள் விளாசி இருக்கிறார்.

மொத்தம் டெல்லி அணி 14 போட்டிகளில் ஏழு போட்டிகளை வென்று 14 புள்ளிகள் எடுத்து இருக்கிறது. ரன் ரேட் அடிப்படையின் காரணமாகவே தற்பொழுது பிளே ஆஃப் வாய்ப்பில் இருந்து வெளியேறி இருக்கிறது. மேலும் முக்கிய வீரர்களின் காயம் பெரிய பிரச்சினையாக இருந்த போதிலும் கூட, டெல்லி அணியின் இந்த செயல்பாடு சிறப்பான ஒன்றாக அமைகிறது. அந்த அணிக்கு ஜாக் பிரேசர், ஸ்டப்ஸ், அபிஷேக் போரல் ஆகியோர் பேட்டிங்கிலும், ராசிக் சலாம் மற்றும் இசாந்த் சர்மா பந்துவீச்சிலும் எதிர்பாராத அளவிற்கு தாக்கத்தை தந்திருக்கிறார்கள்.

ரிஷப் பண்ட் மற்றும் டெல்லி அணி குறித்து பேசி இருக்கும் சவுரவ் கங்குலி “ரிஷப் பண்ட் ஒரு இளம் கேப்டன். அவர் காலப்போக்கில் கற்றுக் கொள்வார். அவர் காயத்திலிருந்து திரும்பி வந்து முழு சீசனும் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் எங்களுக்கு ஆரம்பத்தில் அவர் மீது சந்தேகங்கள் இருந்தது. மேலும் 10 அணிகள் ஐபிஎல் தொடரில் வந்ததிலிருந்து இந்திய வீரர்கள் முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது. மேலும் ரிஷப் பண்ட் முழு சீசனும் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஷஷாங்க் சிங் சின்ன சூரியகுமார்.. பேட்டிங்கில மட்டும் கிடையாது இந்த விஷயத்துல கூடதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

இந்தத் தொடரில் காலப்போக்கில் ராசிக் சலாம் வளர்ச்சியை நீங்கள் பார்த்தீர்கள். அவர் சிறப்பாக செயல்பட்டார். டெல்லி ஆடுகளம் மட்டும் இல்லாது மைதானமும் சிறியது என்பதால் பந்து வீசுவது எளிதானது கிடையாது. அவர் எங்களுக்கு இந்த சீசன் முழுவதிலும் டெத் ஓவர்களில் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்”என்று கூறியிருக்கிறார்