துபே இன்னும் 3 ஆட்டம் மட்டும் இப்படியே விளையாடு.. அந்த ஜாக்பாட் அடிக்கும் – சேவாக் மெசேஜ்

0
179
Sehwag

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியையும், நேற்று தனது இரண்டாவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் வென்று புள்ளி பட்டியலில் வலிமையாக முதல் இடத்தில் நீடிக்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடைபெற்ற இந்த இரண்டு போட்டியிலும் சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா மற்றும் மிடில் வரிசை ஆட்டக்கார சிவம் துபே இருவரும் மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் காட்டும் பேட்டிங் அணுகுமுறை மற்றும் புத்திசாலித்தனம் சிஎஸ்கே அணிக்கு பெரிய நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

- Advertisement -

குறிப்பாக சிவம் துபே முதல் ஆட்டத்தில் பவுன்சர்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை மிகச் சிறப்பாக சமாளித்து, ஜடேஜாவை வைத்துக்கொண்டு விக்கெட்டை விடாமல் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். இரண்டாவது போட்டியில் விளையாட வந்ததும் சுழல் பந்துவீச்சு இருந்த காரணத்தினால் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு அடித்தார். மேலும் தொடர்ந்து ஆட்டத்தை முன் நகர்த்தி எடுத்துச் சென்று வேகப்பந்து வீட்டில் ஷாட் பந்துகளிலும் சிறப்பாக விளையாடினார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மே மாதம் 26 ஆம் தேதி முடிவடைந்ததும் அடுத்து ஜூன் மாதம் ஐந்தாம் தேதி முதல் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்திய தேர்வுக் குழுவினர் உறுதியாக தற்போதைய ஐபிஎல் செயல்பாட்டையும் முன்வைத்து பார்ப்பார்கள் என்பது உறுதி. எனவே இந்திய வீரர்களில் சிலருக்கு நடப்பு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமானதாக அமைகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கூறும்பொழுது “சிவம் துபே நன்றாக தயாராகி வருகிறார். அவருக்கு ஷார்ட் பந்துகள் மூலம் நெருக்கடி கொடுக்கப்படும் என்று அவருக்குத் தெரியும். அப்படியான பந்துகளை தடுக்க வேண்டுமா? அல்லது விட்டு விட வேண்டுமா? அல்லது அடிக்க வேண்டுமா? என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் நன்றாக இருக்கிறது. மேற்கொண்டு மூன்று நான்கு போட்டிகளில் இப்படியே அவர் விளையாடினால், டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கலாம்.

- Advertisement -

இதையும் படிங்க : 2017 ஐபிஎல்.. கேப்டனா எனக்கு தோனி நிறைய உதவி செய்தார்.. மறக்கவே முடியாது – ஸ்மித் பேச்சு

ஜீரோ ரன்னுக்கு இரண்டு விக்கெட் போயிருந்தாலும் கூட அவருக்கு முன்னால் சுழல் பந்துவீச்சாளர் இருந்தால் அவர் நிச்சயம் சிக்ஸர் அடிக்க செல்வார். ஏனென்றால் அவருடைய பலம் மற்றும் ஆட்ட பாணி அதுதான்.தன்னால் குறிப்பிட்ட பந்துவீச்சாளரிடம் இருந்து ஒரு பந்தை எப்படி சிக்சர் அடிக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.