சிஎஸ்கேல ருதுராஜ் இருக்குறதுக்கு ரொம்ப நன்றி.. இந்த ரகசியத்தை அவர்கிட்ட கேட்டுகிட்டு இருக்கேன் – மைக் ஹசி பேட்டி

0
590
Hussey

சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் லக்னோ அணிக்கு எதிராக சதம் அடித்தார். இந்த நிலையில் இதற்கு அடுத்து இதே மைதானத்தில் நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக 98 ரன்கள் அடித்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் சிஎஸ்கே நீங்கள் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி ருதுராஜ் குறித்து பாராட்டி பேசி இருக்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் கான்வே காயமடைந்தது பெரிய பின்னடைவை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய இடத்தில் விளையாடிய ரச்சின் ரவீந்தரா ஃபார்மில் இல்லாத காரணத்தினால், ரகானே துவக்க ஆட்டக்காரராக வரவேண்டிய நிலை இருக்கிறது. மேலும் டேரில் மிட்சலும் கடந்த போட்டியில் தான் ஓரளவுக்கு எதிர்பார்த்த படி விளையாடினான்.

- Advertisement -

இந்த நிலையில் கேப்டன் ருதுராஜ்தான் சிஎஸ்கே அணியை ஆரம்பத்தில் இருந்து பேட்டிங்கில் காப்பாற்றக் கூடியவராக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி 500 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்க, ருதுராஜ் அவருக்கு அடுத்து 447 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் ருதுராஜ் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறும்பொழுது “ருதுராஜ் ஒரு அற்புதமான திறமையான வீரர். அவர் புத்திசாலித்தனமான டைமிங் பேட்ஸ்மேன். அவருடைய பிளேஸ்மெண்டின் ரகசியம் என்னவென்று நான் அவரிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

அவர் எப்பொழுதும் பேட்டிங்கில் கேப்களை கண்டுபிடிப்பார். அவர் மிகவும் புத்திசாலித்தனமான பேட்ஸ்மேன். அவருக்கு எப்பொழுது தாக்கி விளையாட வேண்டும்? எப்பொழுது ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய வேண்டும்? என நன்றாக தெரியும்.அவர் பந்துவீச்சாளர்களுக்கு ஒரு படி மேல்தான் எப்பொழுதுமே இருப்பார். அவர் சிஎஸ்கே அணியின் ஓபனராக இருப்பதற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : கைவிரலில் காயம் அடைந்த ருதுராஜ்.. தொடர்ந்து ஐபிஎல் ஆடுவாரா.?.. அவரே கொடுத்த விளக்கம்

அவர் இவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருந்து கேப்டன் பொறுப்பையும் சுமப்பது சவால் ஆகத்தான் இருக்கிறது. அவர் கேப்டன் க
பொறுப்பையும் சேர்த்து செய்து வருவதற்கு, நாம் நம் தொப்பியை கழட்டி அவரை பாராட்ட வேண்டும்.அவர் எல்லா காலத்திலும் சிறந்த வீரராக வெற்றி பெறுவார்” என்று கூறியிருக்கிறார்.