2017 ஐபிஎல்.. கேப்டனா எனக்கு தோனி நிறைய உதவி செய்தார்.. மறக்கவே முடியாது – ஸ்மித் பேச்சு

0
130
Smith

தற்பொழுது 17 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்த 17 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் விளையாடுவதற்கு தடை பெற்றன. இந்த சமயத்தில் இந்த இரண்டு அணிகளும் பிரிந்து, குஜராத் லயன்ஸ் மற்றும் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற இரண்டு புதிய அணிகள் புதிய உரிமையாளர்கள் மூலம் உருவானது.

இதில் 2016 ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு மகேந்திர சிங் தோனி கேப்டனாக இருந்தார். அந்த வருடம் முதல் முறையாக மகேந்திர சிங் தோனியின் அணி ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அணியின் உரிமையாளர்களுக்கும் தோனிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாக, கேப்டன் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக கொண்டுவரப்பட்டார்

- Advertisement -

2017 ஆம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிகப் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்த போட்டிக்கு மிகுந்த பெரிய இடம் இருக்கிறது.

இதற்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் ஐபிஎல் தொடருக்குள் வந்தது. அந்த ஆண்டு மெகா ஏலத்தில் சிறந்த அணியை உருவாக்கி, மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் தான் அம்பதி ராயுடு சிஎஸ்கே அணிக்கு முதன் முதலில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இதுகுறித்து ஐபிஎல் வர்ணனைக்கு திரும்பி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் பேசும் பொழுது “தோனி உடன் பல அருமையான சந்தர்ப்பங்கள் இருந்தது. நான் அவருடன் சேர்ந்து விளையாடுவதை மிகவும் ரசித்தேன். நான் கேப்டனாக இருந்து அவரை வழிநடத்திச் செல்வதையும் ரசித்தேன். அவர் நிச்சயமாக கேப்டனாக இருந்த எனக்கு நிறைய உதவிகள் செய்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரச்சின் சிஎஸ்கே ரசிகர்களுக்கு நல்ல தீனி போடறார்.. அவரை நான் ரெடி பண்றது இப்படித்தான் – மைக் ஹஸ்ஸி பேட்டி

தோனியை விட ஸ்டெம்புகளுக்கு பின்னால் இந்தியாவில் சிறந்தவர்கள் வேறு யாருமே கிடையாது. அவர் விளையாட்டையும் அதன் கோணத்தையும் புரிந்து கொள்ளும் விதம் வேறு யாருக்குமே அமையாது ஒன்று. எனவே அவர் விளையாட்டில் ஒரு அபாரமான நபராக இருந்தார். நான் அவருடனான கம்பெனியை மைதானத்தில் மட்டுமில்லாமல் வெளியிலும் ரசித்தேன்” எனக் கூறியிருக்கிறார்.