நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி அதிரடியான ஹைதராபாத் அணியை 134 ரன்கள் சுருட்டி அசத்தி வென்று இருக்கிறது. இந்த வெற்றியில் சிஎஸ்கே பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் பெரிய பங்கு வகித்திருக்கிறார். ஆனால் நேற்று அவர் கைவிரலில் காயம் அடைந்து நீண்ட நேரம் மைதானத்தில் சிகிச்சை எடுத்தார். அவருக்கு தொடர்ச்சியாக கையில் காயம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் துவக்க ஆட்டக்காரராக ருதுராஜ் மீண்டும் சிறப்பான ஒரு இன்னிங்ஸ் விளையாடி அணியை காப்பாற்றினார். 54 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 98 ரன்கள் குவித்தார்.
ருதுராஜ் ஆட்டத்தை கையில் எடுத்த காரணத்தினால் மட்டுமே சிஎஸ்கே அணியின் பேட்டிங் லைன் அப் குறைகள் நேற்று வெளியில் தெரியாமல் போனது. ஆரம்ப முதலே சிறப்பாக ஆரம்பித்த அவர், உடன் ஜோடி சேர்ந்த டேரில் மிட்சல் மற்றும் சிவம் துபே உடன் இணைந்து அதிரடியாக சதம் மற்றும் அரைசத பார்ட்னர்ஷிப்புகளை கொண்டு வந்தார்.
மேலும் நேற்று கேப்டனாகவும் ருதுராஜ் பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. மேலும் மைதானத்தின் பெரிய பக்கங்களை சிறப்பாக பயன்படுத்தி, குறிப்பாக டீப் பாய்ண்ட் திசையில் டே ரில் மிட்சலை வைத்து அபாயகரமான துவக்க ஆட்டக்காரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் சார்பாக விக்கெட்டை கைப்பற்றியது சிறப்பாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று பீல்டிங்கில் ருதுராஜ் விரலில் காயம் அடைந்தார். ஏற்கனவே அவருக்கு விரலில் காயம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று சாதாரணமாக மைதானத்தில் உருண்டு வந்த பந்தை அவர் பிடிக்க, பந்து விரலில் இருந்த காயத்தில் மோத அவரால் வலி தாங்க முடியவில்லை. இதன் காரணமாக மைதானத்திற்குள் வந்த பிசியோ நீண்ட நேரம் அதற்கான சிகிச்சை அளித்தார்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. நியூசிலாந்து அணி அறிவிப்பு.. அனுபவ வீரர்கள் படை.. புது ரூட்டில் கோப்பைக்கு குறி
போட்டி முடிந்த பிறகு காயம் குறித்து ருதுராஜ் இடம் கேட்ட பொழுது “காயம் பெரிதான ஒன்றாக இல்லை. எல்லாம் நன்றாகவே இருக்கிறது. மிகவும் சூடான அதே வேளையில் ஈரப்பதமான சூழ்நிலையில், கிட்டத்தட்ட கடந்த ஆட்டத்தில் 40 ஓவர்கள் இந்த ஆட்டத்தில் அதேபோல 40 ஓவர்கள் இருப்பது தான் கொஞ்சம் பிரச்சனை. ஆனால் கவலைப்படும் காயம் கிடையாது. எனவே தொடர்ந்து போட்டிகளில் விளையாடுவேன்” என்று கூறியிருக்கிறார்.