பஞ்சாப் டீம்ல நானே பாதிக்கப்பட்டேன்.. அவங்க ஜெயிக்கவே மாட்டாங்க காரணம் இதுதான் – சேவாக் குற்றச்சாட்டு

0
791
Sehwag

இதுவரையில் நடந்து முடிந்திருக்கும் 16 ஐபிஎல் சீசன்களில் மிக மோசமான செயல்பாட்டை கொண்டு இருக்கும் அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி இருக்கிறது. மொத்தமாக இரண்டு முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அதில் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், அவர்கள் வீரர்களை நிலையாக வைத்திருக்க மாட்டார்கள் என்பதை தாண்டி, அவர்கள் தங்கள் அணியின் கேப்டனையே நிலையாக வைத்திருக்க மாட்டார்கள். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாபின் அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால், 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அணியிலேயே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் அந்த அணியில் எவ்வளவுதிறமையானவர்கள் பொறுப்புக்கு வந்தாலும் கூட, ஆட்டத்திற்கான திட்டங்கள் மற்றும் அதை செயல்படுத்துவதில் வீரர்களின் தடுமாற்றம் மிக அதிக அளவில் இருக்கும். அவர்கள் கையில் இருக்கும் ஆட்டத்தை கூட தோற்பார்கள். அவர்களுடைய எல்லா தேர்வுகளும் தவறாகவே முடியும். அவ்வளவு குழப்பம் அந்த அணியில் இருக்கும்.

இதேபோல் ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் வெற்றி என்பது மெகா ஏலத்தில் 50 சதவீதம் உறுதி செய்யப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில் மெகா ஏலத்திலேயே தனது தோல்வியை உறுதி செய்து விடும். எல்லா வீரர்களையும் வாங்குவதற்கு முயற்சி செய்து, கடைசியில் அணிக்கு தேவையில்லாத வீரர்களை வாங்கி, ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியாத தவறுகளை செய்வார்கள்.

நேற்று ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியை எடுத்துக் கொண்டால், ஷிகர் தவானின் கேப்டன்சி மிக மோசமாக இருந்தது. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் மோசமாக இருந்ததோடு, பந்து வீச்சாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பந்தை வீசினார்கள். பின்புறம் பைன் லெக்கில் பீல்டரை உள்ளே வைத்துக் கொண்டு, அர்ஸ்தீப் சிங் பந்தை பவுன்சராக வீசினார். இதே போல் பீல்டரை வைத்துக்கொண்டு சாம் கரன்பந்தை இடுப்புக்கு வீசினார். இந்த நேரத்தில் கேப்டன் ஷிகர் தவான் எந்தவித திட்டங்களும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பந்துவீச்சாளர்களிடமும் எந்தத் திட்டமும் இல்லை.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : பிசிசிஐ கொண்டு வரும் புது டெக்னாலஜி.. புல்டாஸ் நோ-பால்.. இனி தப்பே நடக்காது

இதை நேற்று ஹிந்தி கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ஷேவாக் பார்த்த பொழுது “நான் பஞ்சாப் அணிக்காக விளையாடிய பொழுது என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் குறைந்தது. அந்த அணியில் தவறான இன்புளுயன்ஸ் இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் நன்றாக விளையாட மாட்டார்கள். இதனால் அவர்கள் வெற்றி பெறவும் மாட்டார்கள். இதன் காரணமாக என்னுடைய தனிப்பட்ட ஆட்டமும் மோசம் அடைந்தது” என்று மிகக் காட்டமாக குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.