இந்தியா ரூட்டில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.. உலக கோப்பையை வெல்ல செம பிளான்.. புது பயிற்சியாளர்கள் அறிவிப்பு

0
870
Pakistan

தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு எல்லா வடிவத்திலும் இடைக்கால பயிற்சியாளர்கள் மட்டுமே செயல்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் அணிக்கு நிரந்தர பயிற்சியாளர்களை தேடும் வேலை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் பாகிஸ்தான் சிவப்பு மற்றும் வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்த பின்பு, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. மேலும் பாகிஸ்தான் அணிக்கு இயக்குனராக முன்னாள் வீரர் முகமது ஹபிஸ் கொண்டுவரப்பட்டார். இறுதியாக அவருடனும் கருத்து முரண்பாடு ஏற்பட்டு நீக்கம் செய்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மிகப்பெரிய தொகைக்கு பாகிஸ்தான் வெள்ளைப்பந்து கிரிக்கெட் பயிற்சியாளர் பொறுப்புக்கு ஆஸ்திரேலியாவின் சேன் வாட்சன் இடம் தொடர்ந்து பேசி வந்தார்கள். கடைசி நேரத்தில் அதை சேன் வாட்சன் மறுத்துவிட்டார். டி20 உலகக்கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய பயிற்சியாளரை கொண்டு வர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மும்முரமாக ஈடுபட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளுக்கு, 2011ஆம் ஆண்டு இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற பொழுது இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டனை கொண்டு வந்திருக்கிறார்கள். பயிற்சியாளர் பொறுப்பில் ஏற்கனவே அவர் தன்னை நிரூபித்து விட்டதும், மேலும் தற்பொழுது ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. லாரா தேர்வு செய்த இந்திய அணி.. 2 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளிக்க முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்புகிறது. மேலும் இரண்டு புதிய பயிற்சியாளர்களை பாகிஸ்தான் வரவேற்பதாகவும், இந்த புதிய பொறுப்பை சவாலாக எடுத்துக் கொள்வதாக புதிய பயிற்சியாளர்களும் பேசி இருக்கிறார்கள்!