டி20 உலககோப்பை.. லாரா தேர்வு செய்த இந்திய அணி.. 2 முக்கிய வீரர்களுக்கு இடம் இல்லை

0
196
Lara

டி20 உலகக்கோப்பை இன்னும் ஒரு மாதத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் துவங்க இருக்கும் நிலையில், இந்திய முன்னாள் வீரர்கள் தங்களுடைய டி20 உலகக்கோப்பை இந்திய அணியை வெளியிட்டு வந்தார்கள். இந்த நிலையில் பிரைன் லாரா தன்னுடைய டி20 உலகக்கோப்பை இந்திய அணியை வெளியிட்டு இருக்கிறார்.

நடைபெற இருக்கின்ற டி20 உலகக்கோப்பைக்கு முதல் அணியாக நியூசிலாந்து தன்னுடைய அணியை அறிவித்திருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் இருக்கிறார். அதே சமயத்தில் இன்று இந்திய அணி நிர்வாகமும் அணியை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் கரீபியன் லெஜெண்ட் பேட்ஸ்மேன் முன்னாள் வீரர் பிரையன் லாரா தன்னுடைய டி20 உலகக் கோப்பை இந்திய அணியை வெளியிட்டிருக்கிறார். அவருடைய இந்த அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் துவக்க ஆட்டக்காரராகவும் இருக்கிறார்.

மேலும் மற்றொரு துவக்க ஆட்டக்காரராக இளம் வீரர் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் வருகிறார். இந்த அணியில் கூடுதலாக இன்னொரு துவக்க பேட்ஸ்மேனை லாரா சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா வருகிறார்கள். சுழல் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் இருக்கிறார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் தேர்வு இருவரையும் லாரா வைத்திருக்கிறார். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருக்க, இவர்களுடன் சந்தீப் சர்மா மற்றும் மயக்க யாதவ் இருக்கிறார்கள். சிவம் துபே இருக்க அதே சமயத்தில் முகமது சிராஜ் மற்றும் ரிங்கு சிங்குக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : 2025 ஐபிஎல் ஏலத்துல அஸ்வினை யாரும் வாங்க மாட்டாங்க.. அதுக்கு இதான் காரணம் – சேவாக் பேட்டி

பிரையன் லாரா வெளியிட்டுள்ள அவருடைய டி20 உலகக்கோப்பை இந்திய அணி :

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், சிவம் துபே, சாகல், குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஸ்தீப் சிங், சந்தீப் சர்மா மற்றும் மயங்க் யாதவ்.