ஐபிஎல் 2024 : பிசிசிஐ கொண்டு வரும் புது டெக்னாலஜி.. புல்டாஸ் நோ-பால்.. இனி தப்பே நடக்காது

0
73
IPL2024

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் ரூல் மற்றும், இரண்டு பிளேயிங் லெவனுக்கு அனுமதி என இரண்டு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த இரண்டு விதிகளுமே போட்டியை சுவாரசியப்படுத்தியதோடு, போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் டாசுக்கு இருக்கும் பங்கை குறைத்தது. மேலும் ஒவ்வொரு அணியிலும் ஒரு இந்திய வீரருக்கு அதிகப்படியான வாய்ப்பு கிடைத்தது. இது இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் அறிமுகமாவதற்கு உதவியது. குறிப்பாக துருவ் ஜுரல் கடந்த ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அறிமுகமானார்.

நடைபெற்று வரும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம் என்ற புதிய ரூல் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் எல்பிடபிள்யூ, கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் போன்றவற்றுக்கு நடுவர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். மேலும் அதிகபட்ச தரமுடைய கேமராக்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.

- Advertisement -

மேலும் இந்த ஹாக் ஐ தொழில் நுட்பம் அமைக்கப்பட்டிருக்கும் அறையிலேயே, அந்த வல்லுனர்களோடு மூன்றாவது நடுவரும் அமர்ந்திருப்பார். அவருக்கு எந்த மாதிரியான கேமரா கோணங்கள் தேவையோ, அதைக் கேட்டு வாங்கி உடனுக்குடன் வேகமாக முடிவை அறிவிப்பார். தரமான கேமராக்களின் துல்லியத்தால் நல்ல முடிவுகள் கிடைப்பதோடு, வேகமாகவும் முடிவுகள் கிடைக்கும்.

இதற்கு அடுத்து ஸ்டெம்ப்பிங் செய்யப்பட்டு முடிவு மூன்றாவது நடுவருக்கு செல்லும் பொழுது, பந்து பேட்டில் பட்டு இருக்கிறதா? என்று கூடுதலாக ஆராயும் விதியையும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நடப்பு ஐபிஎல் தொடருக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் எந்த வகையிலும் அவுட் என்றால் பேட்ஸ்மேன்கள் தப்பிக்க முடியாதது உறுதி செய்யப்பட்டது.

தற்பொழுது இன்னொரு புதிய விதியையும் பிசிசிஐ ஐபிஎல் தொடருக்குள் கொண்டு வந்திருக்கிறது. பேட்ஸ்மேனின் இடுப்பு உயரத்திற்கு மேல் புல்-டாஸ் பந்துகள் வீசப்படுவதை நடுவர்கள் கணிப்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரியதாகவே இருந்து வருகிறது. எனவே இதன் துல்லிய தன்மையை அதிகரிப்பதற்காக பிசிசிஐ இது சம்பந்தமாக புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜுக்கு கேப்டனா திடீர்னு.. இப்ப இந்த புது தலைவலி உருவாகி இருக்கு.. பாலாஜி பேட்டி

இந்த தொழில்நுட்பத்தின் படி ஒவ்வொரு வீரர்களின் பாதம் முதல் இடுப்பு வரையிலான உயரம் அளக்கப்படுகிறது. வீரர்களின் உயரங்கள் அளக்கப்பட்டு, அதன் விவரங்கள், புல்டாஸ் நோ-பாலை கண்டறிவதற்கான தொழில் நுட்பத்துடன் சேர்த்து இணைக்கப்படுகிறது. இப்படியான புல்டாஸ் பந்துகள் வீசப்படும் பொழுது, பேட்ஸ்மேன் எந்த நிலையில் இருந்தாலும், ஏற்கனவே அழைக்கப்பட்ட அவரது இடுப்பு உயரத்தை வைத்து, பந்து நோ-பாலா இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இதனால் கள நடுவர்களுக்கு பெரிய தலைவலி தீர்ந்திருக்கிறது.