ஆர்சிபி இதுக்காகத்தான் விராட் கோலிய விரும்புது.. இந்திய அணி நலனுக்காக இது நடந்தே ஆகனும் – அனில் கும்ப்ளே பேட்டி

0
1020
Virat

நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 47 பந்தில் 92 ரன்கள் குவித்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். நேற்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி குறித்து அனில் கும்ப்ளே பாராட்டி இருக்கிறார்.

விராட் கோலி நேற்றைய போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை அசுத்தோஸ் சர்மா தவறவிட்டார். அங்கிருந்து ஆரம்பித்த விராட் கோலி மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். நேற்று அவர் எல்லா நேரத்திலும் அதிரடியாக விளையாடும் நோக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டே வந்தார்.

- Advertisement -

இது மட்டும் இல்லாமல் 90 ரன்கள் தாண்டிய பொழுதிலும் சிக்ஸர் அடிப்பதற்கு சென்று விக்கெட்டை இழந்தார். அவர் சதத்தை நோக்கமாகக் கொண்டு விளையாட வில்லை. தற்பொழுது 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி 70 ரன் ஆவரேஜில், 153 ஸ்ட்ரைக் ரேட்டில், 634 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலி குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே “ஆமாம் விராட் கோலி சந்தேகம் இல்லாமல் சிறப்பாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவருக்கு சிறிது இடைவெளி இருந்தது. ஆனால் அவர் தன்னை தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள முயற்சி செய்து வந்திருக்கிறார். தற்போது அவர் 634 ரன்கள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆர்சிபி அணி ஏன் அவரை விரும்புகிறது என்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அந்த அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெறவும், மேலும் இந்திய அணியின் நலனுக்காகவும், அவருடைய இந்த பேட்டிங் ஃபார்ம் தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் விராட் கோலி குறித்து இதே விவாதத்தில் பங்கு பெற்ற ஷேன் வாட்சன் பேசும் பொழுது “விராட் கோலியை பொறுத்தவரை அவர் ஒவ்வொரு பந்திலும்ஆட்டத்தில் இருப்பார். மேலும் களத்தில் அவர் எதையும் தவறவிட மாட்டார். இதன் காரணமாகத்தான் ரூசோவ் 50 ரன்கள் எடுத்துக் கொண்டாடியதற்கு, அவர் ஆட்டம் இழந்த பொழுது இவர் திருப்பி கொண்டாடினார்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : தோனிக்கு என்ன மாதிரியான காயம்.. இன்று குஜராத்துக்கு எதிராக களம் இறங்குவாரா? – பிளமிங் பதில்

தற்பொழுது சென்னை, டெல்லி, லக்னோ அணிகள் தங்களுக்கு மீதம் இருக்கும் போட்டிகளில் இறுதியாக 14 புள்ளிகள் மட்டுமே பெற வேண்டும், அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் ஆர்சிபி அணி தனது கடைசி இரண்டு போட்டிகளையும் வென்று 14 புள்ளிக்கு வர வேண்டும். அப்படி வரும் பொழுது அதே 14 புள்ளிகள் எடுத்து இருக்கும் அணியை விட ரன் ரேட்டில் அதிகம் இருக்க வேண்டும். இது நடந்தால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றில் இருக்கும். எனவே இந்த ஒரு வாய்ப்பில் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -