ஆர்சிபி சிஎஸ்கே போட்டி நடக்குமா?.. மழை வாய்ப்பு எவ்வளவு.. சப் ஏர் சிஸ்டத்தின் ஸ்பெஷல்

0
150
IPL2024

நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது சிஎஸ்கே மற்றும் ஆர் சி பி விதிகள் மோதிக்கொள்ள இருக்கும் போட்டிக்குதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இதில் மூன்றாவது அணியாக மழையும் கலந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பதால், ரசிகர்கள் உச்சகட்ட டென்ஷனில் இருக்கிறார்கள். பெங்களூரில் இன்றைய வானிலை குறித்து பார்க்கலாம்.

இன்றைய போட்டி மழை வந்து கைவிடப்பட்டால் சிஎஸ்கே அணிக்கு அது ஒரு அதிர்ஷ்டமானதாகவே அமையும். அவர்கள் 15 புள்ளிகள் உடன் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைவார்கள். ஆர் சி பி அணி பரிதாபமாக வெளியேற வேண்டியது வரும். எனவே போட்டி நடக்க வேண்டியது ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

- Advertisement -

தற்பொழுது தென் தமிழகத்தில் கோடைகால மழை சரியான நேரத்தில் ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இந்தக் கோடைகால மழை பெங்களூரிலும் தொற்றிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை விட அங்கு அதிகமாகவே தொடர்ந்து பெய்து வருகிறது.

பெங்களூரில் நேற்றைய நிலவரப்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை ஒட்டி பரவலாக மழை பெய்திருக்கிறது. மைதானத்தில் தண்ணீர் தேங்கும் அளவுக்கான மழை பெய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று சிறிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

பெங்களூர் வானிலை அறிக்கை படி இன்றைய நாளில் பகலில் எப்பொழுதும் போல வெயிலாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை மாலையில்தான் ஆரம்பிக்கிறது. குறிப்பாக மாலை 4 மணியிலிருந்து ஆறு மணி வரை மழை பெய்வதற்கான வாய்ப்புகள் 50% இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க: தோனி ரசிகர்களுக்காகத்தானே விளையாடறிங்க.. அப்ப இத செய்யுங்க – இர்பான் பதான் வேண்டுகோள்

அதேசமயத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நீரை வெளியேற்றுவதற்காக சப் ஏர் சிஸ்டம் 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மைதானத்தின் கீழே மணல் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக தண்ணீர் தேங்காமல் வடியும். எனவே எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், மழை நின்றவுடன் 30 முதல் 40 நிமிடங்களில் மைதானத்தை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். எனவே போட்டி நேரத்தில் எவ்வளவு மழை பெய்து கொஞ்சம் இடைவெளி விட்டாலும் கூட, போட்டியை எப்படியும் நடத்தி விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.