“விராட் கோலி மத்தவங்க நினைக்கிற மாதிரி கிடையாது.. வேற லெவல்” – ஸ்டார்க் ஓபன் ஸ்பீச்

0
289
Starc

கடந்த வருடம் இறுதியில் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஆஸ்திரேலியா இடது கை வேகபந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டார்.

ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு தனி வீரருக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சாதனை தொகையாக இது அமைந்தது. இவருக்கு அடுத்து இவருடைய அணியின் கேப்டன் கம்மின்ஸ் 20 கோடியை தாண்டி ஏலத்தில் விலை போனார். இவர்கள் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறார்கள்.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் மொத்தம் இரண்டு வருடங்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக 2015 ஆம் ஆண்டு அவரது முதல் ஐபிஎல் பயணம் ஆரம்பித்தது. கடைசியாக அவர் வேறு எந்த அணிக்கும் விளையாடவில்லை.

இந்த நேரத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இடையே நடந்த ஒரு போட்டியில், பொல்லார்ட் மற்றும் ஸ்டார்க் இருவருக்கும் இடையே நடந்த மறக்க முடியாத சூடான நிகழ்வில் விராட் கோலி தன் அணி வீரர் ஸ்டார்க் பக்கம் நின்றதுதான் அவர் எப்படியான கேப்டன் என்பதை வெளியில் காட்டியது.

பொதுவாகவே களத்தில் ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலிக்கும், ஆக்ரோஷமாக விளையாடும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையே நிறைய முறை மோதல்கள் இருந்திருக்கிறது. அதே சமயத்தில் அவர் தன்னுடன் விளையாடிய வீரர்களுடன் நெருக்கமான மரியாதையான நட்பை பேணி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஐபிஎல் தொடருக்கு இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு திரும்ப இருக்கும் மிட்சல் ஸ்டார்க் இடம் விராட் கோலி உடனான நட்பு பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது.

இது குறித்து பேசி உள்ள அவர் கூறும் பொழுது “ஆர்சிபி அணியில் இரண்டு வருடங்கள் விராட் கோலி உடன் இணைந்து விளையாடியதை நான் அன்புடன் நினைவு கூர்கிறேன். அவர் அப்பொழுது அந்த அணியின் கேப்டனாக இருந்தார். முதல்முறையாக அவரைப் பற்றி நான் அப்பொழுதுதான் அறிந்தேன். குறிப்பாக களத்திற்கு வெளியே!

இதையும் படிங்க : U19 உலக கோப்பை.. சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் மீண்டும் சதம்.. வில்லியம்சன் சாதனை சமன்

அவர் களத்திற்கு வெளியே மிகவும் வித்தியாசமான நபர். களத்திற்கு வெளியே அவர் அடக்கமானவராகவும், அன்பான குணம் கொண்டவராகவும் இருப்பார். அதே சமயத்தில் அவர் களத்தில் கடுமையான போட்டியாளர். நான் அவரைப் பற்றி எப்பொழுதும் அதிகம் நினைவில் வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.