U19 உலக கோப்பை.. சர்பராஸ் கான் தம்பி முசிர் கான் மீண்டும் சதம்.. வில்லியம்சன் சாதனை சமன்

0
1191
Musheer

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றில் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய அணிக்கு ஆதர்ஸ் சிங் மற்றும் அர்சின் குல்கர்னி இருவரும் களமிறங்கினார்கள்.

- Advertisement -

முதல் லீக் சுற்றின் கடைசி போட்டியில் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த அர்சின் குல்கர்னி இந்த முறை ஒன்பது ரன்களில் வெளியேறினார்.

இதற்கு அடுத்து இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வரும் சர்பராஸ் கானின் தம்பி முசிர் கான் களமிறங்கினார். நன்றாக விளையாடிய ஆதர்ஸ் சிங் 52 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கேப்டன் உதய் சகரன் 34 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஒரு முனையில் நிலைத்து நின்று மிகச் சிறப்பாக விளையாடிய முசிர் கான் அரைசதம் கடந்து, இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

- Advertisement -

மேற்கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் 126 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி இறுதியாக எட்டு விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது.

முதல் சுற்றில் மூன்று ஆட்டங்களில் முசிர் கான் 3, 118, 73 என மொத்தம் 194 ரன்கள் குவித்தார். இதற்கடுத்து இன்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் போட்டியில் 131 ரன்களோடு சேர்த்து மொத்தம் நான்கு போட்டிகளில் 325 ரன்கள் குவித்து இருக்கிறார்.இதில் ஒரு அரை சதம் மற்றும் இரண்டு சதங்கள் அடக்கம்.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒரு உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் ஷிகர் தவான் மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இருவரும் இரண்டு சதங்கள் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்கள். தற்பொழுது இந்தப் பட்டியலில் முசிர் கானும் இணைந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : “என் மகன் போல”.. சப்ராஸ் கானுக்கு கிறிஸ் கெய்ல் அனுப்பிய வாழ்த்து செய்தி.. 2016ன் மாறாத கணிப்பு

தற்போது அண்ணன் சர்பராஸ் கான் மற்றும் தம்பி முசிர் கான் இருவரும் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்கள். சர்பராஸ் கான் நேற்று இந்திய டெஸ்ட் அணியில் முதல் வாய்ப்பை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.