ரோகித் சர்மா உடன் அமெரிக்கா புறப்படாத கோலி.. போட்டியை தவறவிடும் வாய்ப்பு.. என்ன நடக்கிறது?

0
2269
Virat

நடப்பு ஐபிஎல் தொடரை தொடர்ந்து, இதற்கு அடுத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரிலும் விராட் கோலிக்கு சில சிக்கல்கள் திடீரென உருவாகி இருக்கிறது. விராட் கோலி நேற்று ரோகித் சர்மா குழுவினருடன் அமெரிக்காவுக்கு செல்லவில்லை.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என இரு நாடுகளில் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இதற்கென இரண்டு பிரிவுகளாக இந்திய அணி அமெரிக்கா செல்ல இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ரோகித் சர்மா மற்றும் அக்சர் படேல் சிவம் துபே போன்ற வீரர்கள் அடங்கிய ஒரு குழு துபாய் பறந்தது. அங்கிருந்து அவர்கள் நேராக அமெரிக்கா செல்வார்கள். இந்த நிலையில்தான் விராட் கோலிக்கு சில ஆவணங்கள் சரியாக கிடைக்காததால், அவரால் நேற்று ரோகித் சர்மா குழுவினருடன் அமெரிக்கா புறப்பட முடியவில்லை.

இந்த நிலையில் விராட் கோலி மே 30-ம் தேதி அமெரிக்கா புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில் ஜூன் ஒன்றாம் தேதி பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி ஒரு பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது. புதிய சூழ்நிலையில் இது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான பயிற்சி போட்டியாக பார்க்கப்படுகிறது. இதை விராட் கோலி தவற விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விராட் கோலி உடன் இணைந்து ஹர்திக் பாண்டியாவும் நேற்று ரோகித் சர்மா குழுவினருடன் செல்லவில்லை. ஆனால் தற்போது இங்கிலாந்தில் இருந்து வரும் ஹரிதிக் பாண்டியா நேரடியாக அமெரிக்க சென்று இணைந்து கொள்வார் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஐபிஎல் பைனல் 2024.. சென்னையில் மழை வாய்ப்பு.. ரிசர்வ் டே நடக்காவிட்டால் யாருக்கு கோப்பை

இத்துடன் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டிகள் விளையாடும் இரண்டு அணிகளில் இருக்கும் டீ 20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் விராட் கோலி உடன் சேர்ந்து மே மாதம் 30 ஆம் தேதி அமெரிக்கா செல்வார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.