ஐபிஎல் பைனல் 2024.. சென்னையில் மழை வாய்ப்பு.. ரிசர்வ் டே நடக்காவிட்டால் யாருக்கு கோப்பை

0
138
IPL2024

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே 2024 ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நேற்று பயிற்சியின் போது மழை குறுக்கிட்டதாக செய்திகள் வந்தது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றிலும் வானிலை எவ்வாறு இருக்கும் என்று பார்க்கலாம்.

தற்போது இந்த போட்டிக்கு இரண்டு அணிகளும் மிக வேகமாக தயாராகி வருகின்றன. ஹைதராபாத் அணியை விட கொல்கத்தா அணிக்கு நீண்ட ஓய்வு கிடைத்திருந்தது. ஹைதராபாத் அணி ஒருநாள் இடைவெளியில் உடனே இறுதி போட்டியில் விளையாடுவதற்காக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இரண்டு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் என்று பார்க்கும் பொழுது ஹைதராபாத் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், அந்த அணியில் பந்துவீச்சு கவலைக்குரியதாக இருக்கிறது. அவர்கள் பேட்டிங்கில் அடிக்கும் அதிக ரன்களை நம்பியே விளையாடுகிறார்கள்.

ஆனால் கொல்கத்தா அணியில் பேட்டிங் சிறப்பாக இருக்கும் அளவுக்கு பந்துவீச்சும் சிறப்பாக இருந்து வருகிறது. முன்பு இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் சுனில் நரைன் உடன் துவங்கி அதி வேகமாக விளையாடி நல்ல துவக்கங்களை கொடுத்து வந்தார். தற்போது குர்பாஸ் அப்படியான ஒரு இன்னிங்ஸ் விளையாடி தருவாரா? என்பது மட்டுமே அவர்களுக்கு சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் கோடைகால மழை ஆரம்பித்து இருக்கிறது. இரண்டு மாநிலங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. நேற்றும் சென்னையில் மாலையில் மழை இருந்திருக்கிறது. இன்று சென்னையில் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும். மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை குறுக்கீடு உறுதியாக இருக்கும் என்று சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2வது டி20.. 207 ரன்.. தென் ஆப்பிரிக்கா திணறல்.. வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றி அசத்தல்

ஒருவேளை இன்று மழையால் ஆட்டம் நின்றால் நாளை ஆட்டம் நடைபெறும். நாளையும் ஆட்டத்தில் போட்டியில் முடிவு தெரியாவிட்டால், லீக் சுற்றின் முடிவில் அதிக புள்ளிகள் எடுத்திருந்த கொல்கத்தா அணிக்கு கோப்பை கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது!