கவுதம் கம்பீர் நவீன் உல் ஹக் உடன் சமாதானம்.. ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாக விராட் கோலி சுவாரசிய பேச்சு

0
689
Virat

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் திடீரென மத்தியில் பரபரப்பாக மாறியது. லக்னோ அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையே லக்னோவில் நடந்த போட்டியில் விராட் கோலி, நவீன் உல் ஹாக் மற்றும் கம்பீர் உடன் பெரிய வாக்குவாதம் களத்தின் மத்தியில் சென்றது. இதனால் கடந்த ஐபிஎல் தொடர் அந்த நேரத்தில் திடீரென பரபரப்பாக மாறியது. தற்பொழுது இருவருடனும் விராட் கோலி சமாதானமாகி இருக்கிறார். இதுகுறித்து அவர் நகைச்சுவையாக தனது கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக கவுதம் கம்பீர் இணைந்து இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெகு எளிதாக ஆர்சிபி அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வென்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த பொழுது, கொல்கத்தா அணிக்கு ஆலோசனை சொல்வதற்காக இடைவேளையில் கவுதம் கம்பீர் களத்தில் வந்தார். அப்போது அங்கே இருந்த விராட் கோலியின் அவரும் கட்டியணைத்து நட்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் அவர்களுக்கு இடையே இருந்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதே போல இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் நவீன் உல் ஹக் உடன் இருந்த பிரச்சனைக்கு விராட் கோலி முடிவு கொண்டு வந்தார். அவர் பெயர் சொல்லி ரசிகர்கள் கூச்சல் இடுவதை நிறுத்த சொன்னார். பிறகு நவீன் உல் ஹக் விராட் கோலி இடம் வந்து பேச, அந்தப் பிரச்சனையும் அத்துடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து நகைச்சுவையாக பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “நான் நவீன் மற்றும் கம்பீர் பாய் இருவரையும் கட்டியணைத்தேன். எல்லா சச்சரவுகளும் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால் மக்கள் மசாலாவை இழந்து விட்டனர். இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியை டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் பண்ண மாட்டாங்க – மேக்ஸ்வெல் அதிரடி பேச்சு

நவீன் உல்ஹக் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என என்னிடம் கூறினார். நானும் உடனே சரி அவ்வளவுதான் முடித்து விடலாம் என்று கூறினேன். அதற்குப் பிறகு அவர் இனி என்னுடைய பெயர் இங்கு ஒலிக்காது உங்களுக்கான ஆதரவு மட்டும்தான் இருக்கும்” என்று கூறினார் என்று நகைச்சுவையாக பேசி இருக்கிறார்.