விராட் கோலியை டி20 உலககோப்பை இந்திய அணியில் செலக்ட் பண்ண மாட்டாங்க – மேக்ஸ்வெல் அதிரடி பேச்சு

0
416
Virat

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 17 வது ஐபிஎல் சீசன் மே மாதம் 26ம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு அடுத்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் இரு நாடுகளில் டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இந்த டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவது குறித்து மேக்ஸ்வெல் சுவாரசியமான கருத்து ஒன்றைக் கூறியிருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு சதம் உட்பட 300 ரன்களுக்கும் மேல் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை விராட் கோலி கைவசம் வைத்திருக்கிறார். தனி ஒருவராக ஆர்சிபி அணிக்கு மிகச் சிறப்பாக அவர் செயல்பட்டும் கூட, அவருடைய ஸ்டிரைக் ரேட் வைத்து அவர் மீது விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

- Advertisement -

மேலும் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை தேர்வு செய்யலாமா வேண்டாமா? என்கிற விவாதங்களே சென்று கொண்டு இருக்கின்றன. இதற்கு முன்பாக அவரை தேர்வு செய்ய மாட்டார்கள் என்கின்ற ஒரு செய்தி திடீரென சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டது. அதனுடைய தாக்கம் தற்பொழுது வரை இருந்து வருகிறது.

அதே சமயத்தில் விராட் கோலியை டி20 உலக கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்வது குறித்து பேசக்கூடிய எல்லா முன்னாள் வீரர்களுமே இப்படி முதலில் ஒரு விவாதம் உருவாகவே கூடாது என்பதாகத்தான் விராட் கோலிக்கு ஆதரவாக கூறி வருகிறார்கள். ஏப்ரல் இறுதி வாரத்தில் இதற்கான விடை என்னவென்று தெரிந்து விடும்.

இதுகுறித்து பேசி இருக்கும் ஆர்சிபி அணியின் சகவீரர் மேக்ஸ்வெல் கூறும்பொழுது “விராட் கோலி நான் இதுவரை விளையாடிய வீரர்களின் மிகச் சிறந்த வீரர். 2016ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் மொகாலியில் அவர் எங்களுக்கு எதிராக விளையாடிய போட்டியே நான் எதிர்த்து விளையாடியதில் சிறந்த போட்டி. ஒரு போட்டியில் என்ன செய்ய வேண்டும் மற்றும் எப்படி கொண்டு போய் முடிக்க வேண்டும் என்று அவருக்கு இருக்கும் விழிப்புணர்வு தனிச்சிறப்பானது. இந்தியா டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யாது என நம்புகிறேன். ஏனென்றால் அவர் எங்களுக்கு எதிராக வராமல் இருப்பது நல்லது. (நகைச்சுவையாக)

- Advertisement -

இதையும் படிங்க : 4 போட்டி 1 விக்கெட்.. கடைசி கட்டத்தில் அஸ்வினுக்கு பவுலிங் கொடுத்தது சரியா? – சங்கக்கரா பதில்

இந்தியாவில் 1.5 பில்லியன் மக்கள் இருக்கின்ற காரணத்தினால் இப்படியான பேச்சுகள் வருவது இயல்பானது தான். இந்தியாவில் தான் இந்த மக்கள் தொகையில் பாதிப்பேர் கிரிக்கெட் வீரர்கள் ஆகவே இருக்கிறார்கள். எனவே இந்திய அணியில் நுழைவது மிகவும் கடினமான வேலை. அதே சமயத்தில் டி20 இந்திய அணியில் விளையாடக்கூடிய வீரர்களை எடுத்துக் கொண்டு பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பானவர்கள். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.