ஒவ்வொரு வருஷமும் வெட்கமா இருக்கு.. இனி அப்படி கூப்பிடாதிங்க – விராட் கோலி ரசிகர்களுக்கு ரிக்வெஸ்ட்

0
530
Virat

17ஆவது ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இடையில் இருக்கிறது. மார்ச் 22ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ள, மிகவும் கோலாகலமாக ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பெங்களூர் மைதானத்தில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஆர்சிபி ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் திரண்டு வந்து தங்களுடைய அணிக்கு வழக்கம் போல் ஆதரவை கொடுத்தார்கள்.

- Advertisement -

இரண்டு மாதங்களுக்குப் பின்னால் வந்திருந்த விராட் கோலியை பார்க்கவும், அவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்கவும் கூட்டம் அளவு கடந்த ஆவல் கொண்டிருந்தது. நிகழ்ச்சியில் புதிய ஜெர்சி அறிமுகம் நடந்து கொண்டிருந்த பொழுது, கோலி கோலி என மைதானத்தில் இருந்த ரசிகர்களின் உற்சாக குரல் ஓயவே இல்லை.

இந்த நிலையில் விராட் கோலி தலையிட்டு கேட்டுக் கொள்ள அதற்குப் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்சிபி பெண்கள் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ஆண்கள் ஆர்சிபி அணியின் வீரர்கள் விராட் கோலி கேப்டன் பாப் டு பிளிசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

என்னை இனிமே அப்படி கூப்பிடாதிங்க

இதில் விராட் கோலி பேசும்பொழுது “இன்று இரவு நாங்கள் சென்னைக்கு மிக விரைவாக சென்று சேர வேண்டும். எங்களிடம் ஒரு வாடகை விமானம் மட்டுமே இருக்கிறது. எனவே இங்கு எங்களால் நீண்ட நேரம் இருக்க முடியாது. இன்று ஆர்சிபி-யின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

முதலில் நீங்கள் எல்லோரும் என்னை கிங் என்று அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தயவுசெய்து என்னை விராட் என்று அழைக்கவும். என்னை அந்த வார்த்தையில் கிங் என்று எப்பொழுதும் கூற வேண்டாம். நான் இதை பாப் டு பிளிசிஸிடம் சொல்லக் கொண்டிருந்தேன்.

இதையும் படிங்க : ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு வாபஸ் ஏன்?.. டி20-WC தண்டனையில் தப்பிக்க மாஸ்டர் பிளான்

நீங்கள் ஒவ்வொரு வருடமும் என்னை அந்த வார்த்தையில் அழைக்கும் பொழுது எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. எனவே என்னை விராட் என்று கூப்பிடுங்கள். தயவுசெய்து அந்த வார்த்தையை இனிமேல் பயன்படுத்த வேண்டாம். இது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்