பிளேசிஸ் இந்த விஷயத்துல சிரமப்படுறதா சொன்னாரு.. பழைய டீம் திரும்ப கூட வரலாம் – ருதுராஜ் பேட்டி

0
289
Ruturaj

இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்க்கும் போட்டியாக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது. இந்த போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிகவும் கலகலப்பான பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

தற்பொழுது ஆர்சிபி அணிக்கு கேப்டனாக இருந்து வரும் பாப் டு பிளேசிஸ் முன்பு சிஎஸ்கே அணியில் நட்சத்திர துவக்க ஆட்டக்காரராக இருந்தவர். அப்பொழுது சிஎஸ்கே அணியின் இன்னொரு துவக்க ஆட்டக்காரரான ருதுராஜுக்கு அவருடன் நெருக்கமான நட்பு இருந்தது.

- Advertisement -

மேலும் அவருடன் சேர்ந்து விளையாடுவது ருதுராஜுக்கு மிகவும் வசதியான ஒன்றாகவும் இருந்தது. துவக்க ஜோடியாக இருவருக்குள்ளும் சிறந்த புரிதல் காணப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றிய பொழுது, இருவரும் ஏறக்குறைய ஒரே அளவில் ரன்கள் அடித்திருந்தார்கள். ஒரு ரன் வித்தியாசத்தில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை ருதுராஜ் கைப்பற்றி இருந்தார்.

இந்த நிலையில் பாப் டு பிளேசிஸ் பற்றி பேசியிருக்கும் ருதுராஜ் “இந்த ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் டாஸ் போடுவதற்கு முன் அவர் என்னிடம் தன் முழங்கை வலி இன்னும் இருப்பதாகவும் சிரமப்படுவதாகவும் கூறியிருந்தார். நான் அவரிடம் நீங்கள் அந்த ஸ்கூப் ஷாட்டை விளையாட மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டும், அப்பொழுது நான் உங்களுக்கு பீல்டரை உள்ளே வைப்பேன் என்று சொன்னேன்.

ஆனால் அவர் அந்த போட்டியில் அந்த ஒரு ஷாட் மட்டுமில்லாமல் மைதானத்தில் எல்லா பக்கத்திலும் அடித்து விளையாடியது எனக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. மேலும் அவருடைய பழைய அணியான எங்கள் சிஎஸ்கே அணி மீது அவர் கொஞ்சம் ஷாஃப்ட் கார்னர் வைத்திருக்க வேண்டும். மேலும்இந்த ஆண்டு அதிக ரன்கள் அடித்து, அவர் மீண்டும் எங்கள் அணிக்கு திரும்பி வரக் கூட வாய்ப்புகள் உண்டு. (நகைச்சுவையாக)

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சொன்ன அந்த விஷயத்த ஏத்துக்கறேன்.. இது ஐபிஎல்லை சீர்குலைத்து விட்டது – விராட் கோலி பேச்சு

இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக நாங்கள் விளையாடக்கூடிய போட்டி நாங்கள் முன்னோக்கி செல்வதற்கு நிச்சயமாக முக்கியமான போட்டி என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக ஒரு பேட்டராக ஒரு பவுலராக அழுத்தத்தில் இருக்கும் பொழுது பம்ப் ஆகி இருப்பீர்கள். மேலும் ஆர் சி பி அணியினரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்” என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.