எங்ககிட்ட நல்ல பிளான் இருக்கு.. ஆர்சிபி இதை செய்யலனா அடுத்த சீசன்தான் – சிஎஸ்கே பிராவோ பேட்டி

0
130
Bravo

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. பிளே ஆப் சுற்றுக்கு மிக முக்கியமான போட்டி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது. இந்த போட்டிக்கான தயாரிப்புகள் குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ பேசியிருக்கிறார்.

சிஎஸ்கே அணிக்கு நீண்ட காலம் விளையாடி 2022 ஆம் ஆண்டு சீசனோடு பிராவோ ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு வெளியில் டி20 லீக்குகள் விளையாடிய பொழுதிலும், ஐபிஎல் தொடரில் வேற எந்த அணிகளிலும் இணையாமல், சிஎஸ்கே அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

- Advertisement -

ஏற்கனவே சிஎஸ்கே அணியில் பந்துவீச்சு பயிற்சியாளராக அனுபவம் மிக்க எரிக் சிமன்ஸ் இருக்கிறார். ஆனால் பிராவோ ஒரு பந்துவீச்சாளராக டி20 கிரிக்கெட்டில் மிக அதிக அனுபவம் கொண்டவர். எனவே அவருடைய பயிற்சி முறையும் அவருடைய அனுபவ அறிவுரைகளும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு யூனிட்டுக்கு பெரிய அளவில் பலம் சேர்த்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஆர்சிபி அணிக்கு எதிராக நடக்க இருக்கும் மிக முக்கியமான போட்டியில், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு தயாரிப்பு எப்படிஇருக்கிறது? ஆர்சிபி என்ன செய்தால் அடுத்த கட்டத்திற்கு நகரலாம் என்பது குறித்து பிராவோ தன்னுடைய கருத்தைக் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பிராவோ பேசும்பொழுது “நீங்கள் எதிரணிகளை சரியாக மதிக்க வேண்டும். எனவே நாங்கள் ஆர் சி பி அணிக்கு மரியாதை கொடுக்கிறோம். நாங்கள் ஒரு பவுலிங் யூனிட்டாக நன்றாக தயாராகி இருக்கிறோம். எங்களிடம் நல்ல திட்டங்கள் இருக்கிறது. ஆர்சிபி அணி அதை முறியடிக்க திட்டங்களைக் கொண்டு வந்து விளையாட வேண்டும். அப்படி சிறப்பாக அவர்கள் செயல்பட்டால் எதுவும் நடக்கலாம். இல்லையென்றால் அவர்கள் அடுத்த சீசன்தான் வர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : நான் ஐபிஎல் சரியா ஆடல உண்மைதான்.. ஆனா டி20 உகோ-க்கு இந்த மாதிரிதான் பிளான் பண்ணினோம் – ரோகித் சர்மா பேட்டி

பொதுவாக வானிலை என்பது எங்களுடைய கட்டுப்பாட்டில் கிடையாது. எங்களிடம் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம் குறித்து நாங்கள் கவலைப்பட மாட்டோம். இது பிளே ஆப் வாய்ப்பை பெறுவதற்கான இன்னொரு போட்டி. நாங்கள் நல்ல ஒரு அணிக்கு எதிரான சவாலை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்று கூறியிருக்கிறார்.