இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது நாளில் நாதன் லயன் விக்கெட்டை கைப்பற்ற ஹர்ஷித் ராணாவுக்கு விராட் கோலி அருமையான யோசனை ஒன்றைக் கூறி செயல்படுத்தி இருக்கிறார்.
இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் திரும்பி வருவது கடினம் என எல்லோரும் நினைத்தார்கள். நியூசிலாந்தை தொடர்ந்துநான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது.
களத்தில் விராட் கோலி செயல்பட்ட விதம்
இந்த நிலையில் பேட்டிங்கில் சரியாக விளையாட முடியாத விராட் கோலி புதிய கேப்டன் பும்ராவுக்கு களத்தில் மிகவும் உதவியாக இருந்தார். ஆஸ்திரேலியாவின் முதல் விக்கெட்டுக்கு
பும்ராவை உறுதியாக ரிவ்யூ எடுக்க வற்புறுத்தி கூட்டி சென்றார். ரிவ்யூ முடிவில் விக்கெட் என்று தெரிந்தது.
இதைத்தொடர்ந்து களத்தில் பீல்டர்களை சரியான கோணத்தில் நிறுத்துவதில் விராட் கோலி தொடர்ந்து வேலை செய்து வந்தார். அவர் களத்தில் பீல்டர்களை அழைத்து நிறுத்தி வைத்தார். மேலும் ஒவ்வொரு ஓவர் முடிவின்பொழுதும் சின்ன சின்ன ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருந்தார்.
லயன் விக்கெட்டுக்கு போட்ட திட்டம்
இன்று ஆஸ்திரேலியா அணி எட்டு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது நாதன் லயன் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது பந்துவீச்சில் இருந்த ஹர்ஷித் ராணாவிடம் நாதன் லயனுக்கு பந்தை உடம்புக்குள் வீசுமாறு விராட் கோலி கூறினார். இந்தத் திட்டத்திற்கு உடனடியாக பலன் கிடைத்தது.
இதையும் படிங்க : கோலிக்கு பும்ரா செஞ்சது அசாதாரணமானது.. நான் அவர் பவுலிங்ல ஆடமாட்டேன் – கில்கிறிஸ்ட் பேட்டி
ஹர்ஷித் ராணா பந்தை நேருக்கு நேராக நாதன் லயனுக்கு உடம்புக்குள் வீச, அவரால் விளையாட முடியாமல் தடுமாறி கேஎல்.ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். மேலும் ஆஸ்திரேலியா அணி 104 ரன்கள் எடுத்துச் சூழ்ந்தது. இந்த விதத்தில் களத்தில் விராட் கோலி கடந்த இரண்டு நாட்களாக கேப்டன் பும்ராவுக்கு பெரிய அளவில் உதவியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






