கோலிக்கு பும்ரா செஞ்சது அசாதாரணமானது.. நான் அவர் பவுலிங்ல ஆடமாட்டேன் – கில்கிறிஸ்ட் பேட்டி

0
1621
Gilchrist

ஆஸ்திரேலியாஅணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக பந்துவீச்சாளராக பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பாராட்டி பேசி இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாடாத நிலையில் முதல் டெஸ்ட் போட்டிக்கு பும்ரா கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று அவர் பேட்டிங்கை தேர்ந்தெடுக்க இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

- Advertisement -

போட்டியை மாற்றிய கேப்டன்

இது தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய வந்த பொழுது இந்திய கேப்டன் பும்ரா பந்து வீச்சில் அவர்களது மண்ணிலேயே அவர்களை ஆட்டம் காண வைத்தார். ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஸ்மித்தை கோல்டன் டக் எடுத்தார். நேற்று நான்கு விகெகட் பும்ரா கைப்பற்றியதால், ஆஸ்திரேலியா அணி 67 ரன்னுக்கு ஏழு விக்கெட்டை இழந்தது.

நேற்றைய நாளில் பும்ரா பந்துவீச்சில் லபுசேன் தந்த எளிய கேட்ச் வாய்ப்பை விராட் கோலி தவறவிட்டார். ஆனால் பும்ரா அதற்காக எந்தவித வருத்தத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் உடனே பந்து வீச சென்று விக்கெட்டுகளை குவித்தார். அவர் சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட் கைப்பற்ற ஆஸ்திரேலியா 104 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

- Advertisement -

நான் பும்ரா பந்து வீச்சில் விளையாட மாட்டேன்

இதுகுறித்து ஆடம் கில்கிரிஸ்ட் கூறும் பொழுது “அது ஒரு கேப்டனின் ஸ்பெல். அவர் சென்று பந்து வீசி ஒரு தொனியை உருவாக்க விரும்பினார். அவர் தன் அணியை எடுத்துக் கொண்டு வழி நடத்தினார்.அந்த நேரத்தில் விராட் கோலி லபுசேன் கேட்ச்சை விட்ட பொழுது பும்ரா அமைதியாக நடந்து கொண்ட விதம் அசாதாரணமானது. அவர் உடனே சரி பரவாயில்லை விடுங்கள் நான் போய் மீண்டும் விக்கெட் எடுக்கிறேன் என்பது போல போய் வேலை செய்தார்.

இதையும் படிங்க : 151 ரன்.. டி20 வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை.. திலக் வர்மா அதிரடி சதம்.. 14 பவுண்டரி 10 சிக்ஸ் ருத்ர தாண்டவம்

“பும்ரா முகம் பார்க்கவே பயமாக இருக்கிறது. அவர் எதையும் விட்டு தருவதில்லை. அவருடைய வித்தியாசமான பந்து வீச்சு ஆக்சன், அவருடைய ஸ்டைல் மற்றும் டெக்னிக் என எதையுமே அவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஒரு பேட்ஸ்மேன் ஆக அவரை எதிர்த்து விளையாடுவது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். நான் நிச்சயம் அவரை எதிர்த்து விளையாட விரும்ப மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -