ப்ளீஸ்! இனி ரோகித்தை பற்றி யாரும் பேசாதீங்க.. அவர் விஷயத்தில் எங்க முடிவு இதுதான் – பிசிசிஐ அதிகாரி சொன்ன வார்த்தை

0
0

ரோஹித் சர்மாவின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்தே முக்கியமான விளக்கம் கிடைத்துள்ளது. 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் விளையாடுவாரா, அல்லது அதற்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகுவாரா என்ற விவாதம் அதிகரித்திருந்த நிலையில், செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செயலாளர் தேவஜித் சைகியா இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

ரோஹித் தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இங்கிலாந்து ஒருநாள் தொடரின் தொடக்கத்தில் 11 மற்றும் 26 ரன்களில் ஆட்டமிழந்த அவர், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அதிரடியாக 138 ரன்கள் விளாசி தனது ஃபார்மை நிரூபித்தார். அதேபோல் 2026 ஐபிஎல் தொடரிலும் 9 போட்டிகளில் 283 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் ரோஹித்தின் தற்போதைய செயல்பாட்டை வைத்து பார்க்கும்போது, அவரது ஓய்வு குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுப்புவது ஏன் என்று பிசிசிஐ தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

- Advertisement -

இதுகுறித்து தேவஜித் சைகியா “அவர் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுகிறார். இன்னும் உங்களுக்கு என்ன வேண்டும்? கடந்த போட்டியில் 130-140 ரன்கள் எடுத்தார். அப்படியிருக்கும்போது இந்த ஊகங்கள் ஏன்? இதுபோன்ற ஊகங்களுக்கு நான் தீனி போட விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரோஹித்தின் உடனடி ஓய்வு குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த உறுதியான தகவலும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அதே நேரத்தில் 2027 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித்தின் ஒருநாள் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எப்போது எடுக்கப்படும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- Advertisement -