ஆசியன் கேம்ஸ் போவது நம் பேட்ஸ்மேன்களுக்கு ஆபத்து.. ஜப்பான்ல இது சரி இல்ல – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
0

​வரவிருக்கும் ஏசியன் கேம்ஸ் 2026 தொடரில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தும் பிட்ச் வசதிகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய முன்னாள் வீரர் தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

​ஜப்பானில் நடக்கும் இந்தத் தொடருக்கு இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் டீம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும் அங்கிருக்கும் கிரிக்கெட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டாப் லெவலில் இல்லை என்றும் பிட்ச் இன்னும் சரியாகத் தயார் செய்யப்படவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

​மேலும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள அக்காமடேஷன் வசதிகளும் வழக்கமான கிரிக்கெட் டோர்னமென்ட் தரத்தில் இல்லை என்ற ஆதங்கமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

​இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “ஏசியன் கேம்ஸ் குறித்து வேறு மாதிரி சர்ச்சை போய்க்கொண்டிருக்கிறது. கடந்த முறையும் இதைப் பார்த்தோம். சீனா அல்லது ஜப்பான் போன்ற நாடுகளில் டாப் குவாலிட்டி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளது, ஆனால் அது கிரிக்கெட்டுக்கு இல்லை. டாப் லெவல் பவுலர் ஃபாஸ்ட் ஆக பௌலிங் செய்தால், பிட்ச் விளையாடத் தகுதியாகவே இருக்காது. அது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் டேஞ்சரஸ் ஆக மாறவும் வாய்ப்புள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “இரண்டாவது பிராப்ளம் என்னவென்றால், கிரிக்கெட் ஒரு வித்தியாசமான ஸ்போர்ட் என்பதை அவர்கள் உணரவில்லை. ஹோட்டல் ரூம்கள் தர முடியாது என்றும், ஒரே ரூமில் இரண்டு பேர் தங்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் தனி ரூம் மற்றும் பிரைவசிக்கு பழகியவர்கள் என்பதால், இந்த ஃபேஸிலிட்டீஸ் அவர்களுக்குச் சரியாக இருக்காது” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -