துலீப் டிராபி ஃபைனல் மேட்ச்சில் முக்கிய பிளேயர்கள் விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தரப்பில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே எல் ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகிய சீனியர் பிளேயர்களை சவுத் ஜோன் டீமிற்காக விளையாட பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னை நகரில் நடக்கும் துலீப் டிராபி ஃபைனல் மேட்ச்சில் ஈஸ்ட் ஜோன் டீமை எதிர்த்து விளையாட வாய்ப்புள்ளது.
அதே சமயம் இளம் பிளேயர்களான வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்த ஃபைனல் மேட்ச்சில் விளையாடுவது ஹெட் கோச் கௌதம் கம்பீர் எடுக்கும் முடிவை பொறுத்தே அமையும்.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசும்போது “ராகுல், படிக்கல் மற்றும் சிராஜ் ஆகிய பிளேயர்களுக்கு தற்போது வேறு எந்த காம்பெட்டிட்டிவ் மேட்ச்சும் இல்லை. அதனால் ஃப்ரீயாக இருக்கும் இந்திய பிளேயர்கள் அனைவரும் துலீப் டிராபி ஃபைனல் மேட்ச்சில் விளையாட வேண்டும் என்று நேஷனல் செலட்கர்ஸ் விரும்புகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்தியன் டீம் டெல்லியில் செப்டம்பர் ஒன்பது அல்லது பத்தாம் தேதி ஒன்றுகூடும். ஹெட் கோச் விரும்பினால் இந்த மூன்று பிளேயர்களையும் ஃபைனல் மேட்ச்சில் விளையாட வைத்துவிட்டு, லேட்டாக டெல்லிக்கு வரவழைக்க முடியும்” என்று கூறி இருக்கிறார்.






