தமிழக வீரர் ஷாருக்கானுக்கு.. கோலி செய்த காரியம்.. ரசிகர்கள் விமர்சனம்.. களத்தில் என்ன நடந்தது?

0
829
Virat

நடப்பு 17 வது ஐபிஎல் சீசனின் 52வது போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் ஷாருக் கானை விராட் கோலி ரன் அவுட் செய்த, அவர் செய்த ஒரு காரியம் பெரிய விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இன்றைய போட்டியில் முதலில் டாசில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆடுகளங்கள் பேட்மேன்களுக்கு மிக சாதகமாக இருப்பது சலிப்பை உண்டாக்குவதாக செய்திகள் பரவிய நிலையில், ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக கொடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

குஜராத் டைட்டன்ஸ் அணி பவர் பிளேவிலேயே 19 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துவிட்டது. நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழக இளம் வீரர் ஷாருக் கான் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இணைந்து அணியை மீட்கும் வேலையை செய்தார்கள்.

இருவரும் ஆரம்பத்தில் பொறுமையாக விளையாடி, கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பின் அதிரடிக்கு மாறினார்கள். இதன் காரணமாக குஜராத் அணியின் ஸ்கோர் மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது. இந்த ஜோடி 37 பந்தில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் டேவிட் மில்லர் 20 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் ஷாருக் கான் அவசரப்பட்டு பந்து வீச்சாளர் முனையில் இருந்து ஒரு ரன்னுக்கு ஓட முயற்சி செய்ய, பந்தை பிடித்த விராட் கோலி அனாயசமாக பிக்கப் த்ரோ அடிக்க, ஷாருக் கான் பரிதாபமாக ரன் அவுட் ஆனார். இந்த நேரத்தில் விராட் கோலி தன்னுடைய ஆக்ரோஷமான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி உங்கள பத்தி எதுவுமே சொல்ல கூடாதா?.. நாங்க பார்த்ததை தானே சொன்னோம் – கவாஸ்கர் விமர்சனம்

இதுவரையில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் ஷாருக் கான் வெளியேறும்போது விராட் கோலி அவருக்கு பறக்கும் முத்தம் கொடுத்தார். ஒரு இளம் வீரர் அதுவும் இந்திய இளம் வீரர் சிறப்பாக விளையாடி வெளியேறும் பொழுது, இந்திய அணியின் முன்னணி வீரர்பாராட்டவில்லை என்றால் கூட, இந்த வகையில் நடந்து கொண்டது தற்பொழுது சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.