கோலி உங்கள பத்தி எதுவுமே சொல்ல கூடாதா?.. நாங்க பார்த்ததை தானே சொன்னோம் – கவாஸ்கர் விமர்சனம்

0
1524
Virat

நடப்பு ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வந்தது. இது குறித்து விராட் கோலி கடுமையான எதிர் வினை செய்திருந்தார். தற்பொழுது விராட் கோலியின் பேச்சுக்கு கவாஸ்கர் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி ஆரம்பத்தில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய போட்டிகள் சில இருந்தன. இதன் காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள், விராட் கோலி மெதுவாக விளையாடுவது பெங்களூர் அணியின் வெற்றியைப் பாதிக்கிறது என்று தங்கள் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் குளிர்சாதன பெட்டி அறைக்குள் இருந்து கொண்டு பேசுபவர்களுக்கு நிலைமைகள் தெரியாது, நான் இப்பொழுது செய்து கொண்டிருப்பதை 15 ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறேன் என்று விராட் கோலி கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு பதிலடி தருவது போல பேசி இருந்தார்.

இந்த நிலையில் விராட் கோலியின் பேச்சுக்கு கவாஸ்கர் தன்னுடைய விளக்கத்தையும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார். மேலும் தங்கள் பார்க்காத ஒரு விஷயத்தை விராட் கோலி குறித்து எதுவும் பேச கிடையாது என்று விமர்சனத்தை கொஞ்சம் காட்டமாகவே வைத்திருக்கிறார்.

இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசும் பொழுது “அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 118 ஆக இருந்த பொழுது தான் வர்ணனையாளர்கள் அது குறித்து கேள்வி எழுப்பினார்கள். மிகச் சரியாகத் தெரியவில்லை நான் நிறைய போட்டிகள் பார்ப்பதில்லை. நீங்கள் 14, 15 ஓவர்கள் விளையாடி 118 ஸ்டிரைக் ரேட் உடன் ஆட்டமிழந்து செல்லும் பொழுது உங்களுக்கு கைத்தட்டல் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது கொஞ்சம் வித்தியாசமானது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை.. எதிர் டீம்களுக்கு நாம பிளான் போட ஐபிஎல் சரியான இடம் – ஜெய்ஸ்வால் பேச்சு

நீங்கள் இது குறித்து பேசும் பொழுது, வெளியில் இருந்து வரும் சத்தங்கள் குறித்து கவலைப்படுவதில்லை என்றும் சொல்கிறீர்கள். பிறகு ஏன் இதற்கு நீங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? நாங்கள் அனைவரும் கொஞ்சம் கிரிக்கெட் விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு தனி அஜெண்டா இதில் கிடையாது. எங்களிடம் விருப்பு வெறுப்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை எங்களுக்கு அப்படி இருந்தாலும் கூட, நாங்கள் எதை பார்க்கிறோமோ அதைத்தான் பேசுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.