நோ-பால் விக்கெட் சர்ச்சை.. சண்டையிட்ட விராட் கோலி.. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது?

0
435
Virat

இன்று ஐபிஎல் தொடரின் 36 ஆவது போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சர்ச்சைக்குரிய முறையில் விராட் கோலி ஆட்டம் இழந்து இருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு பில் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. கேமரூன் கிரீன் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய விராட் கோலி முதல் பந்திலேயே பவுண்டரி அடுத்து சிறப்பாக ஆரம்பித்தார். அடுத்து முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு சிக்ஸரும் அடித்தார். மேலும் மிச்சல் ஸ்டார்க்கின் இரண்டாவது ஓவரில் நோ லுக் ஷாட்டில் அபாரமான சிக்சர் ஒன்றை மேலும் அடித்தார்.

ஹர்ஷித் ராணா வீசிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்து ஃபுல் டாஸ் ஆக விராட் கோலியின் நெஞ்சுக்கு வந்தது. அதே சமயத்தில் அந்த பந்து மெதுவாக இருந்த காரணத்தினால் கொஞ்சம் காற்றில் அப்படியே கீழே டிப் ஆகியது. இதை எதிர்பார்க்காத விராட் கோலி பேட்டை பந்தை நோக்கி நீட்ட, பந்து காற்றில் எழும்பி ஹர்ஷித் ராணாவின் கையில் கேட்ச் ஆனது.

கொல்கத்தா அணியினரும் இந்த பந்து நோபாலாக இருக்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக நினைத்திருந்தன. விராட் கோலியும் அதே நம்பிக்கையில் களத்தில் இருந்தார். ஆனால் மூன்றாவது நடுவர் அதை பரிசோதித்து, பந்து அவரது இடுப்புக்கு கீழ் தரையிறங்குவதாக கூறி, விராட் கோலிக்கு அவுட் கொடுத்து விட்டார். இதை யாராலுமே நம்ப முடியவில்லை. விராட் கோலி மற்றும் ஆர்சிபி கேப்டன் இதற்கு காலத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பிறகு விராட் கோலி கோபமாக வெளியேறினார்.

- Advertisement -

இதையும் படிங்க : 6,4,4,6,4,4.. பில் சால்ட் ஐபிஎல் வரலாற்றில் அசத்தலான புதிய சாதனை.. பலிக்காத ஆர்சிபி மந்திரம்

நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்களின் இடுப்பு வரையிலான உயரம் அளக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் ஃபுல் டாஸ் நோபால் அளக்கப்படுகிறது. மேலும் ஹர்ஷித் ராணா வீசிய பந்து மெதுவாக இருந்தது. மேலும் பந்து காற்றில் கீழே சரிந்து கொண்டிருந்தது. எனவே விராட் கோலி இடுப்புக்கு மேலே பந்தை சந்தித்து இருந்தாலும் கூட, அந்தப் பந்து அவரது இடுப்பை தாண்டும் பொழுது, இடுப்புக்கு கீழே செல்வதாக தெரிகிறது. எனவே கிரிக்கெட் விதிப்படி பந்து இடுப்பு உயரத்திற்கு கீழே இருக்கும் என்றால் அது அவுட் என அறிவிக்கப்பட்டது. ஐசிசி 41.7.1 விதிப்படி விராட் கோலி ஆட்டம இழந்தார் எனும் முடிவு சரி என கூறப்படுகிறது.