6,4,4,6,4,4.. பில் சால்ட் ஐபிஎல் வரலாற்றில் அசத்தலான புதிய சாதனை.. பலிக்காத ஆர்சிபி மந்திரம்

0
129
Salt

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இந்த முறை பெங்களூரு பந்து வீச்சாளர்கள் சுனில் நரைனை மிகச் சிறப்பாக கட்டுப்படுத்தினார்கள். அவர் 15 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

ஆனால் பெங்களூரு பந்துவீச்சாளர்களால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் வெறும் 14 பந்துகளை மட்டுமே சந்தித்து ஏழு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆட்டம் இழந்த பந்தில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதம் அடித்த வீரராக மாறி இருப்பார்.

இதற்கு அடுத்து வந்த இளம் வீரர் ரகுவன்சி 3(4), வெங்கடேஷ் ஐயர் 16(8), ரிங்கு சிங் 24(16) ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்து நின்று 36 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உடன் அரைசதம் அடித்து சரியாக 50 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ரசல் 20(27) மற்றும் ரமன்தீப் சிங் 24(9) இருவரும் 16 பந்துகளில் 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 222 ரன்கள் குவித்தது. யாஸ் தயால் மற்றும் கேமரூன் கிரீன் தலா இருவரும் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20ல 300 ரன் சீக்கிரம் வரப்போகுது.. பசங்க முன்ன மாதிரி எல்லாம் கிடையாது – தினேஷ் கார்த்திக் பேட்டி

இந்தப் போட்டியில் லாக்கி பெர்குசன் வீசிய நான்காவது ஓவரில் பில் சால்ட் நான்கு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 28 ரன்கள் குவித்தார். இதுவரையிலான ஐபிஎல் வரலாற்றில் பவர் பிளேவின் நான்காவது ஓவரில் குவிக்கப்பட்ட மிக அதிகபட்சமான ரன் இதுதான் என்பதை குறிப்பிடத்தக்கது!