ரோகித் சர்மா கட்டி வந்த வாட்ச்.. இத்தனை கோடியா.. அப்படி என்ன சிறப்பு.. முழு விவரம்

0
2181

டி20 உலக கோப்பை காண இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கையில் அணிந்திருந்த வாட்ச் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பொதுவாக விளையாட்டிற்கு எப்படி பெயர் பெற்றவர்களோ அது போல ஸ்டைலுக்கும் பெயர் பெற்றவர்கள். உதாரணமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே இந்திய கிரிக்கெட்டில் ஹீரோக்களாக விளங்குவது மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் அவ்வாறே விளங்குகிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி பூமா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டைலுக்கு பெயர் பெற்ற மற்றொரு வீரரான ரோகித் சர்மா உயர்தர கடிகாரங்கள் அணிவதை எப்போதுமே விரும்பக் கூடியவர். உதாரணமாக ரோலக்ஸ், ஹூப்லாட் மற்றும் மேஸ்ட்ரோ போன்ற உயர்தர வாட்சுகள் அவ்வப்போது அணிந்து கலக்கக் கூடியவர்.

இந்த நிலையில் இந்திய டி20 உலகக் கோப்பை அணியை அறிவித்த பிறகு அதன் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்திய தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில்களை அளித்துள்ளனர். இந்நிகழ்வில் ரோகித் சர்மாவின் கையில் அணிந்திருந்த வாட்ச் முக்கிய கவனத்தை பெற்றது.

2022ம் ஆண்டு படேக் பிலிப் நாட்டிலஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த உயர்தர பிளாட்டினம் வாட்ச் வெள்ளை தங்கத்திலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும். இந்தக் கடிகாரம் அழகியல் ரீதியாக மட்டுமல்லாமல் பல தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் கொண்டுள்ளது. இந்த வாட்ச் ஆனது எந்தவித உள்ளீடும் இல்லாமல் தானாகவே இயங்கக்கூடியது.

- Advertisement -

மேலும் 120 மீட்டர் அடி ஆழம் வரை நீருக்குள் மூழ்கினாலும் எந்தவித சேதாரமும் ஏற்படாது. இந்த வாட்ச் மாடல் நேட்டிலஸ் பிளாட்டினம் 5711 ஆகும். தற்போது இந்த கடிகாரத்தின் விலை 2.17 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் ஆனது 41 மில்லிமீட்டர் விட்டமும் 8.3 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ளது. மேலும் ரோலக்ஸ் போன்ற உயர்தர வாட்ச்களை வைத்திருக்கும் ரோகித் சர்மா வாட்ச்களுக்காக மட்டுமே பல கோடிகள் செலவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அனைத்தும் ஒரு பக்கம் நன்றாக இருந்தாலும், ரோகித் சர்மாவின் முழு எண்ணமும் தற்போது டி20 உலக கோப்பையை கையில் ஏந்தி விட வேண்டும் என்பதாக மட்டுமே இருக்கும். ஏற்கனவே 50 ஓவர் உலகக் கோப்பையை நூல் இழையில் தவறவிட்ட நிலையில், டி20 உலக கோப்பையை எப்படியாவது வென்று விட வேண்டும் என்று இந்திய படையினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.