ஒன்னு இருந்தா ஒன்னு இருக்க மாட்டேங்குது.. ஹர்திக் பாண்டியா கில் கேப்டன்சி வித்தியாசம் இதான் – விஜய் சங்கர் பேட்டி

0
17
Gill

நேற்று லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ அணியை 163 ரன்களுக்கு தடுத்து நிறுத்தி, பேட்டிங்கில் முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, ஆனால் அங்கிருந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி அடைந்தது. இந்த போட்டியின் தோல்வி குறித்து தமிழக வீரர் விஜய் சங்கர் பேசியிருக்கிறார்.

குஜராத் அணி தன்னுடைய முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை வென்று இருந்தது. இதற்கடுத்து சொந்த மைதானத்தில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கடைசி ஐந்து ஓவர்களில் சரியாக பந்து வீசாமல் தோல்வியடைந்தது. நேற்று லக்னோ மணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சரியாக பேட்டிங் செய்யாமல் தோல்வியடைந்து இருக்கிறது. தற்பொழுது 5 போட்டிகளில் குஜராத் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்பொழுது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முகமது சமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இல்லாதது மட்டும் இல்லாமல், காயத்தின் காரணமாக மிடில் ஆர்டர் அனுபவ வீரர் டேவிட் மில்லர் விளையாடாதது பெரிய பின்னடைவை உண்டாக்கி இருக்கிறது. மேலும் நேற்றைய போட்டியில் விக்கெட் கீப்பர் சகாவும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசை மிகவும் அனுபவம் அற்றதாக இருந்ததால், சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் சேர்ந்து பவர் பிளேவில் 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும், மேற்கொண்டு 76 ரன்கள் மட்டும் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்து, 130 ரன்களில் சுருண்டு, அந்த அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டியதாக இருந்தது.

இதுகுறித்து பேசி உள்ள விஜய் சங்கர் கூறும் பொழுது ” கேப்டன்சியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியாவுக்கும் கில்லுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. வித்தியாசம் என்னவென்றால் கடந்த போட்டியில் அல்லது இந்த போட்டியில் நாங்கள் வென்றிருந்தால் விஷயங்கள் வித்தியாசமாக இருந்திருக்கும். பஞ்சாப் அணிக்கு எதிராக நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்து சரியாக பந்து வீசவில்லை. இந்தப் போட்டியில் நாங்கள் சிறப்பாக பந்துவீசி சரியாக பேட்டிங் செய்யவில்லை. இரண்டும் ஒரே போட்டியில் சேர்ந்து அமைய வேண்டியது தற்பொழுது முக்கியமாக இருக்கிறது. அப்படி அமையும் பொழுது நாங்கள் வெற்றி பெற தொடங்குவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இனி அவங்கள தடுக்க முடியாது.. மும்பை இந்தியன்ஸ்க்கு பொல்லார்ட் திரும்ப கிடைச்சிட்டார் – அம்பதி ராயுடு பேச்சு

நாங்கள் முதல் மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வென்றோம். சில சமயங்களில் போட்டிகளை வெல்வதற்கு கூடுதலான விஷயங்கள் தேவைப்படுகின்றன. நாங்கள் இதுவரையில் அணி நிர்வாகத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன், எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். இது கடினமான நேரத்தில் கைகளை உயர்த்தவும், கேரக்டரை காட்டுவதும் ஆகும். இது எங்களுக்கு முடிவு கிடையாது. ஐபிஎல் ஒரு நீண்ட தொடர்” எனக் கூறியிருக்கிறார்.