வேற வேலை இல்லையா கோலி .. சோசியல் மீடியாவுல குப்பையான விஷயங்களை படிக்கனுமா? – சைமன் டால் விமர்சனம்

0
214
Virat

நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணிக்கு எதிராக, 201 ரன் டார்கெட்டை 16 ஓவர்களில் சேஸ் செய்து, ஆர்சிபி அணி புதிய சாதனை படைத்தது. இந்த போட்டியில் அந்த அணியின் விராட் கோலி மற்றும் வில் ஜேக்ஸ் இருவரும் அபாரமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். போட்டிக்குப் பிறகு விராட் கோலி பேசிய விஷயம் குறித்து, தற்பொழுது சைமன் டால் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் விராட் கோலி 44 பந்துகளை சந்தித்து 70 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுத்தார். அவர் ஆரம்பத்தில் ரன் ரேட்டை சிறப்பாக விளையாடி காப்பாற்றி வந்தார். இதன் காரணமாக துவக்கத்தில் தடுமாறிய வில் ஜேக்ஸ் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.

- Advertisement -

பிறகு சிறப்பாக விளையாடிய வில் ஜேக்ஸ் 41 பந்தில் சதம் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்தத் தொடர் முழுவதும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் கரேட் குறித்த பேச்சுகள் வெளியில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான் களத்தில் நிற்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விராட் கோலி நேற்று காட்டினார்.

மேலும் விராட் கோலி நேற்று பேசும்பொழுது 15 ஆண்டுகளாக இந்த வேலையை தொடர்ந்து செய்து வருவதாகவும், கிரிக்கெட் வர்ணனைப் பெட்டியில் இருப்பவர்களுக்கு களத்தில் உள்ள உண்மை சூழ்நிலை தெரியாது என்றும், களத்தில் இருக்கும் தனக்கே என்ன நடக்கிறது என்று தெரியும் என்றும், தன் பேட்டிங் ஸ்டிரைக் ரேட் பற்றிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் சைமன் டால் கூறும் பொழுது “அவர் சோசியல் மீடியாவில் நிறைய விஷயங்களை படித்து அதற்கு எதிர்வினை செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை அவர் படிக்கவில்லை என்றாலும் கூட, அவருடைய குழுவில் இருக்கும் யாரோ ஒருவர் படித்து, அந்த விஷயங்களை விராட் கோலியிடம் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். விராட் கோலி ஒரு சிறந்த வீரர். அவர் போட்டிக்குப் பிறகு இப்படியான விஷயங்களுக்கு எதிர்வினையாற்ற தேவையில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : கோலி விஷயம் ஏமாற்றமா இருக்கு.. நேத்து மொத்த உலகத்துக்கும் தெரிஞ்சுடுச்சு – இர்பான் பதான் பேச்சு

விராட் கோலி இப்படி பேசுவது இந்த ஆண்டு மட்டுமே நடக்கவில்லை. அவர் போட்டிக்குப் பிறகு இப்படி பேசுவதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் வரக்கூடிய குப்பையான கருத்துக்களை படித்து, அதற்கு அவர் ரியாக்ட் செய்ய வேண்டிய அவசியமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.