இனி அவங்கள தடுக்க முடியாது.. மும்பை இந்தியன்ஸ்க்கு பொல்லார்ட் திரும்ப கிடைச்சிட்டார் – அம்பதி ராயுடு பேச்சு

0
205
Romario

நேற்று ஐபிஎல் தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில், மும்பை வான் கடை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு ரொமாரியோ செப்பர்ட் மிக முக்கிய காரணமாக இருந்தார். அவரை அடுத்த பொல்லார்ட் என்று அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக ஆரம்பித்து நடுவில் விக்கெட்டுகளை இழந்தது. மீண்டும் 200 ரன்களை எடுக்கக் கூடிய இடத்திற்கு வந்தது. ஆனால் நேற்றைய ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சாதகமாக இருந்ததால், 200 ரன்கள் என்பது எதிரணி எட்டக்கூடிய இலக்காகவே அமைந்திருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கில் ரொமாரியோ செப்பர்ட், அன்றிச் நோர்க்கியா வீசிய ஆட்டத்தின் இருபதாவது ஓவரில் 4,6,6,6,4,6 என மொத்தம் 32 ரன்கள் அடித்து நொறுக்கினார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று 234 ரன்கள் குவித்தது. இதுவே வெற்றிக்கான வித்தியாச ரன் ஆகவும் நேற்று அமைந்தது.

மேலும் பந்துவீச்சுக்கு வந்த ரொமாரியோ செப்பர்ட் அதிரடியாக விளையாட ஆரம்பித்த டேவிட் வார்னர் விக்கெட்டையும் கைப்பற்றினார். தொடர்ந்து போராடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 205 ரன்கள் எடுக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல வருடங்களாக கரீபியன் வீரர் கீரன் பொல்லார்ட் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அந்த அணி நெருக்கடியான நேரங்களில் இருந்த பொழுது தாக்கம் தரக்கூடிய செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்தார். தற்பொழுது அவருடைய இடத்தை நிரப்பக்கூடிய வகையில் ரொமாரியோ செப்பர்ட் செயல்பாடு அமைந்திருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக.. நான் பீல்ட் செட் பண்றதுக்கான காரணம் இதுதான் – உண்மையை சொன்ன இஷான் கிஷான்

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது “நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டை தவற விடுகிறது. அதே சமயத்தில் ரொமாரியோ செப்பர்ட் அவர் இடத்தை நிரப்புகிறார். அவர் பந்தை அடிக்கும் விதம் எனக்கு பொல்லார்டை நினைவுபடுத்துகிறது. பல ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, அதிரடியாக வெளியில் வந்து ஆட்டத்தை வென்று கொடுப்பது பொல்லார்டின் வழக்கமாக இருந்தது. தற்பொழுது இவரும் அதையே செய்கிறார்” என்று கூறி இருக்கிறார்.