வீடியோ.. தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்.. ரீமேக் செய்த சர்பராஸ் கான் தம்பி முசிர் கான்

0
155
Dhoni

இன்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பையில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டாஸ் வென்று இந்திய அணியை பேட்டிங் செய்துவிட்ட நியூசிலாந்துக்கு, பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக களம் இறங்கும் சர்பராஸ்கானின் தம்பி முசிர் கான் சிறப்பான பேட்டிங் மூலம் பெரிய நெருக்கடியை உண்டாக்கினார்.

- Advertisement -

இந்திய அணி 40 ஓவர்கள் தாண்டி இருந்த பொழுது 212 ரன்கள் எடுத்திருந்தது. அந்த வேலையில் களத்தில் நின்ற முசிர் கான் 91 ரன்களில் இருந்தார்.

ஆனாலும் கூட சதத்தைப் பற்றி யோசிக்காமல் ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து பவுண்டரி எடுத்து, மேற்கொண்டு அடுத்த ஓவரில் தனது சதத்தை நிறைவு செய்தார். அவருக்கு இந்த தொடரில் இது இரண்டாவது சதம் ஆகும்.

தற்பொழுது தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி இதுவரையில் விளையாடிய எல்லா ஆடுகளங்களும் மிகவும் மெதுவானவையாக இருக்கின்றன. இதனால் ஷாட்களை இறுதி நேரத்தில் கனெக்ட் செய்வது கடினமாக இருக்கிறது.

- Advertisement -

முசிர் கான் சதம் அடித்த பிறகு இந்திய அணியின் ரன் ரேட்டை உயர்த்துவதற்காக அதிரடியில் ஈடுபட்டார். பிக்கப் ஷாட்டில் அற்புதமான ஒரு சிக்சரை ஸ்கொயர் லெக்கில் அடித்தார்.

இதற்கு அடுத்து தொடர்ந்து அதிரடியில் ஈடுபட்ட அவர் மகேந்திர சிங் தோனியின் பாணியில் ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அவரைப் போலவே மிட் விக்கெட் திசையில் சிக்ஸருக்கு பந்தை அனுப்பி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பொதுவாக ஹெலிகாப்டர் ஷாட்டை எப்படி கச்சிதமாக விளையாட வேண்டுமா அதேபோல் பந்தை வரவிட்டு மணிக்கட்டின் பலத்தை பயன்படுத்தி, இறுதி நேரத்தில் பேட்டை 180 டிகிரிக்கு சுழற்றி அற்புதமாக அந்த ஷாட்டை அடித்தார். தோனி போல் பெரிய உடல் வலிமை இல்லையென்றாலும் கூட, இந்த சிறிய வயதில் அவர் அதை அற்புதமாக விளையாடியது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த போட்டியில் அவர் 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 126 பந்தில் 131 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க : “கோலி மேக்ஸ்வெல் கிடையாது.. இவர்தான் டி20க்கு எப்பவும் சிறந்த பேட்ஸ்மேன்” – வில்லியம்சன் தேர்வு

இந்த தொடரில் இதுவரை அவர் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் என 325 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் இன்றைய போட்டியில் கூட வலது கை பேட்ஸ்மேனான அவர் இடது கை சுழற் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.