“கோலி மேக்ஸ்வெல் கிடையாது.. இவர்தான் டி20க்கு எப்பவும் சிறந்த பேட்ஸ்மேன்” – வில்லியம்சன் தேர்வு

0
1208
Virat

தற்காலத்தில் கிரிக்கெட் உலகில் டி20 கிரிக்கெட் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. எதிர்காலத்தில் உருவாகும் வீரர்கள் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு தங்களை தகுதி உள்ளவர்களாக வைத்துக் கொள்வதற்கே பெரிய முயற்சி செய்வார்கள்.

இதன் விளைவாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு தனிப்பட்ட பேட்ஸ்மேனை காண்பது அரிதான விஷயமாக இருக்கும். மேலும் இந்த காலகட்டத்திலேயே அப்படி யாரும் கிடையாது.

- Advertisement -

ஆனாலும் விதிவிலக்காக ஒரே ஒரு வீரராக மூன்று வடிவத்திலும் சிறப்பான செயல்பாட்டை வைத்திருப்பவராக விராட் கோலி மட்டுமே இருக்கிறார். மற்ற எல்லோரும் ஏதாவது ஒரு வடிவம் அல்லது இரண்டு வடிவத்தில்தான் தங்களது முத்திரையைப் பதித்திருக்கிறார்கள்.

இதில் விராட் கோலி இடம் சிறப்பான விஷயம் என்னவென்றால் அவரிடம் மாடர்ன் கிரிக்கெட்டுக்கான மாடல் ஷாட்கள் கிடையாது. வழக்கமான கிரிக்கெட் புத்தகத்தின் ஷாட்கள்தான் உண்டு. ஆனால் அவர் அதைக் கொண்டு டி20 கிரிக்கெட்டை முழுவதுமாக ஆட்சி செய்திருக்கிறார். 2022 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் மெல்போன் மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடிய இன்னிங்ஸ் சாட்சி.ப்

அதேபோல் ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தனி ஒரு நபராக ஆட்டத்தை தன் அணியின் பக்கமாக திருப்பக்கூடிய தாக்கத்தை உண்டாக்கக்கூடிய பேட்ஸ்மேனாக வெள்ளைப் பந்து கிரிக்கெட் வடிவத்தில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இவர் ஒரு நாள் கிரிக்கெட்டையே டி20 கிரிக்கெட் போல அணுகக் கூடியவர். கடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இவர் அடித்த இரட்டை சதம் இவருக்கு போதுமான உதாரணம்.

மேலும் இன்னொரு பக்கத்தில் கரீபியனின் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெயில் இருக்கிறார். இவர் டி20 கிரிக்கெட் வடிவத்திற்கான ஆரம்பக்கட்ட தூதுவராகவே இருந்தார் என்று சொல்லலாம். இவர் அந்த அளவிற்கு பேட்டிங்கில் டி20 கிரிக்கெட்டின் வருகையின் போது ஆதிக்கம் செலுத்தியவர். பின்பு மத்தியிலும் கூட ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க : U19 உலககோப்பை.. முசிர் கான் 131.. 214 ரன் வித்தியாசம்.. நியூசிலாந்தை சுருட்டி இந்தியா அபார வெற்றி

இந்த நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்பொழுது ” எக்காலத்திற்குமான டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ்” என்று கூறியிருக்கிறார்!