2021 கோலி செய்ததுக்கு.. 2024ல் திருப்பி செய்த ரோஹித்.. நெகிழ்ச்சியில் இரு தரப்பு ரசிகர்கள்

0
12671
Rohit

டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது தொடர்பாக, தற்பொழுது பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தன்னுடைய பாணியில் விராட் கோலி பற்றிய ஒரு கேள்விக்கு பதில் அளித்தது, ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

தற்பொழுது இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுடன், இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் பங்கு பெற்று வருகிறார். வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதும் விலக்கப்பட்டதும் எப்படி? என அவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிக முக்கியமாக ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது ஏன்? என்கின்ற கேள்வி தான் முக்கியமானதாக இருந்தது. அதற்கு மிகத் தெளிவாக அவர் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் அணியில் அவரை சேர்க்க முடியாத நிலைமை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

இந்த நிலையில் விராட் கோலியை தேர்வு செய்வதும், விராட் கோலியின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய கேள்வி ஒன்றை ஒரு பத்திரிகையாளர் முன் வைத்தார். இதற்கு ரோகித் சர்மா எந்த பதிலும் சொல்லாமல், முகத்தில் கை வைத்தபடி சிரிக்க ஆரம்பித்து விட்டார். அவருடைய ரியாக்சன் “என்ன இது இப்படி ஒரு அபத்தமான கேள்வி? விராட் கோலியை பற்றி போய் இப்படி கேட்கலாமா? உங்களுக்கு கிரிக்கெட் பற்றி அவ்வளவுதான் தெரியும்” என்பது போல இருந்தது. அதற்குப் பிறகு அந்த பத்திரிக்கையாளர் ரோகித் சர்மாவிடம் அதை கேட்கவில்லை.

இதே போல 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் பொழுது அப்போதைய கேப்டன் விராட் கோலி இடம் ரோஹித் சர்மாவின் இடம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்வியை ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த தொணியில் எதிர்கொண்ட விராட் கோலி ” அப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க? ரோகித் சர்மாவ டீமை விட்டு வெளியே வைக்கனுமா? அதுவும் டி20 கிரிக்கெட்டிலா?” என்று பத்திரிக்கையாளரை நோக்கி சிரித்தபடியே கேள்வி கேட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரிங்கு சிங் எந்த தப்பும் செய்யவில்லை.. கேஎல் ராகுலை செலக்ட் பண்ணாத காரணம் இதுதான் – அஜித் அகர்கர் விளக்கம்

அன்று விராட் கோலி ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பத்திரிகையாளர்களிடம் பேசிய படியே, இன்று விராட் கோலியை பற்றியான பத்திரிகையாளர் கேள்விக்கு ரோகித் சர்மா தன்னுடைய பாணியில் பதில் அளித்து இருக்கிறார். ரோகித் சர்மாவின் இந்த செய்கை இரு தரப்பு ரசிகர்களையுமே மகிழ்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது!