4 ஸ்பின்னர்களை செலக்ட் பண்ணதுக்கு ஒரு காரணத்தை சொல்றேன்.. மீதியை சொல்ல மாட்டேன் – ரோகித் சர்மா பேட்டி

0
535
Rohit

2024 டி20 உலக கோப்பை இந்திய அணி தேர்வு குறித்து இந்திய அணியின் கேப்டன் மற்றும் இந்திய தேர்வுக்குழு தலைவர் இருவரும் பங்கு பெற்று வரும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏன் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்த்தார்கள் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்திருக்கிறார்.

நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் முழுமையான சுழல் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் என மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஃபினிஷிங் இடத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. நான்கு சுழல் பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து ரிங்கு சிங்கை தேர்வு செய்தாதது பெரிய விமர்சனமாக மாறி வந்தது.

தேர்வு செய்யப்பட்ட நான்கு சுழல் பந்துவீச்சாளர்களில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இருவருமே ஒரே மாதிரி இடதுகை சுழல் பந்துவீச்சாளர்கள். மேலும் அணியில் வலதுகை ஆப் ஸ்பின்னர் ஒருவர் கூட இல்லை. குறிப்பாக திலக் வர்மா போன்ற பகுதி நேர ஆப் ஸ்பின்னர் கூட இல்லை.

இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா இது குறித்து கூறுகையில் ” இந்திய அணிக்கான போட்டிகள் அனைத்தும் காலை 10 மணிக்கு அங்கு துவங்குகின்றன. எனவே இதில் டெக்னிக்கலாக நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் அது குறித்து நான் இப்பொழுது முழுமையாக விளக்கம் சொல்ல மாட்டேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 2021 கோலி செய்ததுக்கு.. 2024ல் திருப்பி செய்த ரோஹித்.. நெகிழ்ச்சியில் இரு தரப்பு ரசிகர்கள்

மேலும் சிவம் துபே ஐபிஎல் தொடரில் பந்து வீசவில்லை ஆனால் உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் பந்து வீசக்கூடியவர். அதனால் அணிக்கு தேவைப்படும் பொழுது சிவம் துபே பந்து வீசுவார். நாங்கள் அவரிடம் இருந்து ஒன்று இரண்டு ஓவர்களை வாங்க பார்ப்போம். அவரைப் போன்றே நாங்கள் ஹர்திக் பாண்டியாவையும் எதிர்பார்க்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.