ரிங்கு சிங் எந்த தப்பும் செய்யவில்லை.. கேஎல் ராகுலை செலக்ட் பண்ணாத காரணம் இதுதான் – அஜித் அகர்கர் விளக்கம்

0
5056
Rinku

நடப்பு ஆண்டு ஜூன் மாதம் துவங்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்கள். இதில் ரிங்கு சிங் மற்றும் கேஎல்.ராகுல் குறித்து அகர்கர் முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

டி20 உலக கோப்பைக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் அதிக விமர்சனத்தை உண்டாக்கிய தேர்வாக ரிங்கு சிங்கை தேர்வு செய்யாதது அமைந்தது. அவர் கிடைத்த 11 வாய்ப்புகளில் 86 ஆவரேஜில் 176 ஸ்ட்ரைக் ரேட்டில் தாக்கத்தை தரக்கூடிய மிகச்சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம் கிடைப்பதற்கான எல்லா சாதகங்களும் இருந்த நிலையில், அவரை இந்திய அணிகள் சேர்க்காமல் விலக்கி வைத்தது அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் அவரை ரிசர்வ் வீரராக 18 பேர் கொண்ட அணியில் சேர்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சிறந்த தேர்வாக விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட்டை சேர்த்து, கேஎல்.ராகுலை இந்த முறை தேர்வு செய்யாமல் விட்டது அமைந்திருக்கிறது. கடைசி நேரத்தில் கேஎல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடையே போட்டி நிலவியது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அஜித் அகர்கர் விளக்கம் கூறும்பொழுது “டி20 உலகக்கோப்பை அணி தேர்வில் ரிங்கோ சிங்கை தேர்வு செய்யாமல் விடுவதுதான் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. அவர் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் மிகச் சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனால் காம்பினேஷனில் அவரை சேர்க்க முடியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலக கோப்பைக்காக.. சிஎஸ்கே ஷிவம் துபேவை தொடர்ந்து இதை செய்ய வைத்தது – இர்பான் பதான் பேட்டி

கேஎல்.ராகுலை சேர்க்காதது திறமையின் அடிப்படையில் கிடையாது. விளையாட வேண்டிய இடத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்பட்டது. எங்களுக்கு மிடில் வரிசையில் விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர்கள் தேவைப்பட்டார்கள். ஆனால் கேஎல்.ராகுல் டாப் ஆர்டரில் விளையாடக்கூடியவர். எனவே எங்களால் அவரை தேர்வு செய்ய முடியவில்லை. அதேபோல் சாம்சங் மற்றும் ரிஷப் பண்ட் இருவரையும் தேர்வு செய்ய காரணமும்” இதுதான் என்று கூறியிருக்கிறார்.